)
தங்க நகைகளை அடகு வைத்து கடன் வாங்குவது என்பது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான ஒன்று. அவசர தேவைக்கு பணத்தை புரட்ட இதுவே எளிய வழி. வருமான சான்றிதழ், சிபில் ஸ்கோர் போன்ற கெடுபிடிகள் அதிகம் இல்லாததால் பலரும் இதையே நாடுகிறார்கள். பொதுத்துறை வங்கிகள் தொடங்கி, தனியார் வங்கிகள் வரை பலரும் நகைக்கடன் வழங்குகின்றனர். ஆனால், குறைந்த வட்டியில் லாபகரமான நகைக்கடன் பெற சில முக்கியமான விஷயங்களை கவனிக்க வேண்டும். நகைக்கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 4 முக்கிய விஷயங்கள் உள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

ரிசர்வ் வங்கி விதிகளின்படி, உங்கள் நகையின் சந்தை மதிப்பில் அதிகபட்சம் 75% வரை மட்டுமே வங்கிகள் கடன் கொடுக்க முடியும். நீங்கள் நகையின் மதிப்பிற்கு இணையாக அதிக தொகையை கடனாக கேட்டால், வங்கிக்கு ரிஸ்க் அதிகம். அதனால் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். நகையின் மதிப்பை விட குறைவாக கடன் கேட்டால், வங்கிக்கு ரிஸ்க் குறைவு. எனவே, குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீங்கள் அடகு வைக்கும் தங்கத்தின் தரம் மிக முக்கியம். பொதுவாக வங்கிகள் 18 கேரட் முதல் 22 கேரட் வரையிலான நகைகளை மட்டுமே ஏற்றுக்கொள்ளும். 24 கேரட் நாணயங்கள் அல்லது பார்கள் சில நேரங்களில் ஏற்கப்படுவதில்லை. கற்கள் பதித்த நகைகளை விட, சுத்தமான தங்க நகைகளுக்கு மதிப்பு அதிகம். தங்கத்தின் தரம் குறைய குறைய, வட்டி விகிதம் அதிகரிக்கலாம் அல்லது கடன் தொகை குறையலாம்.
எவ்வளவு காலத்திற்கு கடன் வாங்குகிறீர்கள் என்பது வட்டியை தீர்மானிக்கும். 12 மாதங்களுக்குள் கடனை திருப்பி செலுத்துவதாக இருந்தால், வங்கிகள் குறைவான வட்டி விகிதத்தை வழங்கும். 3 ஆண்டுகளுக்கு மேல் அவகாசம் கேட்டால், வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். எனவே, முடிந்தவரை சீக்கிரம் கடனை அடைப்பது புத்திசாலித்தனம்.
தங்கத்தின் சந்தை விலை ஏற்ற இறக்கமும் உங்கள் கடன் தொகையை பாதிக்கும். தங்கம் விலை உயரும்போது, உங்கள் நகையின் மதிப்பு கூடுவதால் அதிக கடன் கிடைக்கும்; வட்டி விகிதம் குறையலாம். விலை குறையும்போது, கடன் தொகையும் குறையும்; வட்டி விகிதம் அதிகரிக்கலாம். விவசாய கடன் மூலம் நகைக்கடன் பெற்றால் வட்டி மிக குறைவு. வங்கிகளுக்கும், தனியார் நிதி நிறுவனங்களுக்கும் வட்டி விகிதத்தில் பெரிய வித்தியாசம் இருக்கும். ஒப்பிட்டு பார்த்து தேர்வு செய்யுங்கள். உங்கள் அவசர தேவைக்கு நகைக்கடன் கை கொடுத்தாலும், இந்த காரணிகளை மனதில் வைத்து செயல்பட்டால் பணத்தை மிச்சப்படுத்தலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ