சென்னை வாசிகளே அலர்ட்! போக்குவரத்தில் மேஜர் மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க

Chennai Traffic Changes: சென்னையில் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 19,21,23 ஆகிய தேதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.    

Written by - Umabarkavi K | Last Updated : Jan 18, 2026, 03:37 PM IST
  • சென்னையில் போக்குவரத்து மாற்றம்
  • 3 நாட்களுக்கு அலர்ட்
  • எங்கெங்கு தெரியுமா?
சென்னை வாசிகளே அலர்ட்! போக்குவரத்தில் மேஜர் மாற்றம்.. இந்த ரூட்ல போகாதீங்க

Chennai Traffic Changes Latest News: சென்னையில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, தற்போது பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக, சென்னையில் பீக் ஹவரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதற்கிடையில், அவ்வப்போது போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மாநகர போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Add Zee News as a Preferred Source

சென்னையில் போக்குவரத்து மாற்றம்

அதாவது, குடியரசுத் தினத்தை முன்னிட்டு, சென்னையில் நாளை (ஜனவரி 19) முதல் மூன்று  நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 19,21,24ஆம் தேதிகளில் காமராஜர் சாலையில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனையொட்டி, மூன்று நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  அதன்படி,  காந்தி சிலை போர் நினைவுச்சின்னம் வரை காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 9.30 மணி அனைத்து வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படுகிறது.

மேலும், அடையாறிலிருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கிச் செல்ல விரும்பும் வணிக வாகனங்கள் கிரீன்வேஸ் பாயிண்டில் திருப்பி விடப்பட்டு, திருவேங்கடம் தெரு, தேவநாதன் தெரு, செயிண்ட் மேரிஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை, வெங்கடேச அக்ரகாரம் சாலை, டாக்டர் ரங்கா சாலை, கிழக்கு அபிராமபுரம் 1வது சாலை, ராமச்சந்திர ராவ் சாலை, லஸ் அவென்யூ x அமிர்தாஞ்சன் சந்திப்பு, பி.எஸ்.சிவசாமி சாலை, மியூசிக் அகாடமி, டி.டி.கே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை ஹை ரோடு, ஜி.ஆர்.எச்., டவர் க்ளாக், ஜி.பி. சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வேயை அடையலாம்.

எங்கெங்கு தெரியுமா?

அடையாறிலிருந்து காமராஜர் சாலையில் பாரி கார்னர் நோக்கிச் செல்லும் மாநகர பேருந்துகள் உள்ளிட்ட பிற வாகனங்கள் காந்தி சிலையில் திருப்பி விடப்படும். இந்த வாகனங்கள் ஆர்கே.சாலை, மியூசிக் அகாடமி, டிடிகே சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை ஹை ரோடு, ஜிஆர்ஹெச், டவர் க்ளாக், ஜிபி சாலை, அண்ணா சாலை வழியாக பிராட்வேயை அடைய திருப்பி விடப்படும்.

டாக்டர் நடேசன் சாலை - அவ்வை சண்முகம் சாலை சந்திப்புக்கு அப்பால் காமராஜர் சாலை நோக்கி எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும். டாக்டர் பெசன்ட் சாலை - டாக்டர் காமராஜர் சாலை சந்திப்புக்கு அப்பால் காமராஜர் சாலை நோக்கி எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் ஐஸ் ஹவுஸ் சந்திப்பில் TH சாலை நோக்கி திருப்பி விடப்படும்.

பாரதி சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பைத் தாண்டி காமராஜர் சாலை நோக்கி எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. அந்த வாகனங்கள் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பி விடப்படும். வாலாஜா சாலை - பெல்ஸ் சாலை சந்திப்பைத் தாண்டி காமராஜர் சாலை நோக்கி எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது. இந்த வாகனங்கள் பெல்ஸ் சாலை நோக்கி திருப்பி விடப்படும். அண்ணா சதுக்க பேருந்து நிலையம் தற்காலிகமாக சிந்தத்திரிப்பேட்டை ரயில் நிலையத்திற்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே,   மேற்கண்ட மூன்று நாட்களுக்கு வாகன ஓட்டிகள் இந்த போக்குவரத்து மாற்றத்தை நினைவில் வைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ஓசூர் சர்வதேச விமான நிலையம்... தமிழ்நாடு அரசின் எடுத்த வைத்த அடுத்த ஸ்டெப் - புது அப்டேட்

மேலும் படிக்க | பெங்களூரு – ஓசூர் மெட்ரோ வாய்ப்பே இல்லை: கைவிரித்த கர்நாடகா - என்ன பிரச்சனை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News