கோவை அருகே உள்ள இந்த 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம போயிடுங்க!

பலருக்கும் சுற்றுலா செல்வது விருப்பமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் கோவை அருகே உள்ள பின்வரும் 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம கண்டிப்பாக போயிடுங்க. 

Written by - RK Spark | Last Updated : Jun 22, 2025, 10:05 AM IST
  • கோவை சுற்றுலா இடங்கள்.
  • பலரும் விரும்பி செல்கின்றனர்.
  • மிஸ் பண்ணாம போயிடுங்க.
கோவை அருகே உள்ள இந்த 5 சுற்றுலா தளங்களுக்கு மிஸ் பண்ணாம போயிடுங்க!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக கோயம்புத்தூர் நகரம் உள்ளது. காரணம் இங்குள்ள நிறுவனங்கள் தான். அதிகமான ஜவுளித்துறை சார்ந்த நிறுவனங்கள் இந்த பகுதியில் தான் அமைந்துள்ளது. அதே சமயம் மற்ற மாவட்டங்களை விட கோயம்புத்தூர் மிகவும் அழகான மாவட்டமாக உள்ளது. சுற்றிலும் மலைகள் மற்றும் மரங்கள் என பசுமை நிறைந்த இடமாக உள்ளது. கோவை அருகில் பல்வேறு சுற்றுலா தளங்கள் இருப்பதால் இங்கு மக்கள் அடிக்கடி வந்து செல்கின்றனர். ஒரு நாளோ அல்லது ஒரு வாரமோ என சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு இடங்கள் கோவையை சுற்றியுள்ளது. கோவை அருகில் உள்ள ஐந்து சுற்றுலா தளங்களை பற்றி பார்ப்போம்.

மேலும் படிக்க | முருக பக்தர்கள் மாநாடு: இபிஎஸ் அதிரடி கருத்து... உடனே நயினார் சொன்னதை பாருங்க!

வால்பாறை 

கோயம்புத்தூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு அழகான இடம் தான் வால்பாறை. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள தேயிலைத் தோட்டத்தை ரசிப்பதற்கும், அழகான நீர்வீழ்ச்சியை கண்டு களிப்பதற்கும் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வருகை தருகின்றனர். வால்பாறை அருகே உள்ள ஆழியார் டேம் மற்றும் பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை முக்கியமாக பார்க்க வேண்டிய இடமாகும். சாகசங்களை விரும்பும் சுற்றுலா பயணிகள் இங்கு ட்ரெக்கிங் சென்று இயற்கையை ரசிக்கலாம்.

ஊட்டி 

தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான ஊட்டி கோவைக்கு அருகே உள்ளது. கோவையில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் ஊட்டி உள்ளது. மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஊட்டி அதன் இயற்கை எழில் தோற்றத்திற்காக பலராலும் ரசிக்கப்படுகிறது. இங்குள்ள தேயிலை தோட்டங்கள், படகு சவாரி, ரோஸ் கார்டன், பொட்டானிக்கல் கார்டன் மற்றும் பறந்து இருக்கும் நிலப்பரப்பை பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். 

குன்னூர் 

கோவையிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குன்னூர். ஊட்டியை காட்டிலும் சில அற்புதமான இடங்கள் குன்னூரில் நிறைந்துள்ளது. இங்குள்ள வானிலை பலராலும் விரும்பப்படுகிறது. இதன் காரணமாக பல சுற்றுலா பயணிகள் குன்னூர்க்கு அடிக்கடி வருகை தருகின்றனர். இங்குள்ள லாம்ப்ஸ் ராக், டால்பின்ஸ் நோஸ், சிம்ஸ் பார்க் ஆகிய இடங்களுக்கு அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர். 

கோத்தகிரி 

தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சுற்றுலா தளங்களில் கோத்தகிரியும் ஒன்று. ஊட்டி மற்றும் குன்னூரை போலவே கோத்தகிரியிலும் நிறைய சுற்றுலா தளங்கள் உள்ளது. இங்குள்ள இயற்கை காட்சிகள் அனைவரையும் கவர்ந்து இழுக்கிறது. குறிப்பாக கேத்தரின் நீர்வீழ்ச்சி மற்றும் ரங்கசாமி சிகரம் ஆகியவை பலராலும் விரும்பப்படுகிறது. இங்குள்ள இயற்கை விவசாயத்தை பார்வையிடுதிருக்கும் பலரும் வந்து செல்கின்றனர். 

டாப்ஸ்லிப்

கோவையில் இருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள டாப்ஸ்லிப் மேற்கு தொடர்ச்சி மலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. யானை சவாரி செய்ய, வனவிலங்குகள் பார்க்க மற்றும் வித்தியாசமான பறவைகளை பார்ப்பதற்கு இந்த டாப்ஸ்லிப் ஒரு சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. இங்குள்ள புலிகள், சிறுத்தைகள், யானைகளை பார்ப்பதற்கு பல்வேறு மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் இங்குள்ள இயற்கையான அழகு பலரையும் கவர்ந்து இழுக்கிறது.

மேலும் படிக்க | மதுரை முருகப் பக்தர்கள் மாநாடு... இது பாஜகவின் தேர்தல் வியூகமா? - பின்னணி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News