Tamil Nadu Government Free Laptop: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு 'உலகம் உங்கள் கையில்' என்ற பெயரில் 20 லட்சம் மாணவர்களுக்கு கட்டணமில்லா லேப்டாப்பை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது. முதற்கட்டமாக, 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை கடந்த ஜன. 5ஆம் தேதி தொடங்கப்பட்டது.
TN Free Laptop: ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, சட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை பயிலும் உயர்க்கல்வி மாணவர்களுக்கும் ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் கட்டணமில்லா லேப்டாப் வழங்கப்படுகிறது. இதற்காக 2025-26 நிதியாண்டின் பட்ஜெட்டிலேயே தமிழ்நாடு அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.
TN Free Laptop: லேப்டாப் உள்ள சிறப்பம்சங்கள்
தமிழ்நாடு அரசு வழங்கிய கட்டணமில்லா லேப்டாப்பில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், 128 MB VRAM வழங்கப்பட்டுள்ளது. Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS அமைப்பும் வழங்கப்பட்டுள்ளது. MS Office 365 மென்பொருளும் வழங்கப்பட்டது. Perplexity Pro செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் ஆறு மாத சந்தாவும் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது வழங்கப்படுகிறது.
இதில் 720p HD கேமரா திரையின் மேல் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. 5.0 Bluetooth, 2.5 Ghz Wi-Fi இணைப்பு உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் லேப்டாப் திரையின் அளவு 14 இன்ச் அல்லது 15.6 இன்ச் ஆகும். 40 வாட்ஸ் பேட்டரியுடன் லேப்டாப் வழங்கப்படுகிறது. Windows Defender Protection ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. Dell, Acer, HP உள்ளிட்ட நிறுவனங்களின் லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. அதோடு லேப்டாப்பை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்திருக்கும் லேப்டாப் பேக் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.
TN Free Laptop: புகைப்படங்களை சேதப்படுத்தினால் சிக்கல்...
தயாரிப்பு நிறுவனங்கள், லேப்டாப்பிற்கு 1 வருட உத்தரவாதத்தையும், 3 வருடம் சர்வீஸ்-ம் செய்துதரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லேப்டாப் சார்ந்து ஏதும் மாணவர்களுக்கு உதவி தேவைப்பட்டால் 18005999000 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம். அதேநேரத்தில், மாணவர்கள் தற்போது லேப்டாப்பில் இயல்பாக போடப்பட்டுள்ள OS அமைப்பை மாற்றினால் வாரண்டி கேட்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், லேப்டாப்பிற்கு மேற்புறத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்களில் ஏதும் சேதப்படுத்தினால் வாரண்டி கோரப்படும்போது சிக்கல் எழலாம் என எல்காட் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
லேப்டாப் வழங்கப்பட்ட பின்னர் பலரும் லேப்டாப்பில் உள்ள புகைப்படங்களை சேதப்படுத்தும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்ட நிலையில், மாணவர்களுக்கு இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பொங்கல் பரிசு: டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம்? அரசின் செம்ம அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









