இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!

Last Date to Submit Voter SIR Form: தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான (SIR) படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிகிறது. உங்கள் பெயர் நீக்கத்தைத் தவிர்க்க உடனடியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கும் வழிமுறைகள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 11, 2025, 08:58 AM IST
இன்றே கடைசி நாள்! SIR படிவம் சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் நீக்கப்பட வாய்ப்பு.. உஷார் மக்களே!

How to Fill SIR Form in Tamil Nadu: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) படிவங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்று (டிசம்பர் 11, 2025) மாலையுடன் முடிவடைகிறது. வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் தொடர்ந்து இடம்பெற வேண்டுமானால், உடனடியாக உங்கள் படிவத்தைச் சமர்ப்பிப்பது அவசியம். வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?, உங்கள் SIR படிவத்தை எங்கு சமர்ப்பிப்பது? போன்ற விவரங்களை பார்ப்போம்.

Add Zee News as a Preferred Source

இந்திய தேர்தல் ஆணையம்

சுமார் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய தேர்தல் ஆணையம் மூலம் நாடு முழுவதும் முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் (Special Intensive Revision) பணியைத் தொடங்கியது. அவசர அவசரமாக அங்கு வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி நடைபெற்றது. அதன்மூலம் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கிடையில் இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உட்பட 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் SIR பணி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் எஸ்ஐஆர் (SIR) பணி 

தமிழகத்தில் கடந்த நவம்பர் 4 அன்று எஸ்ஐஆர் (SIR) பணி தொடங்கப்பட்டது. ஆனால் ஒரு மாதம் இடைவெளியில் எப்படி வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி மேற்கொள்வது? மற்றும் பணி அழுத்தத்தில் இருப்பதாக பூத் நிலை அதிகாரிகள் (BLO) பலத்த குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) செயல்முறையை ஒரு வாரம் நீட்டித்தது. அதாவது விண்ணப்பங்களைப் பெறுவதற்கான தேதி டிசம்பர் 11 வரை நீட்டிக்கப்பட்டது. முன்னர் அறிவிக்கப்பட்ட காலக்கெடு டிசம்பர் 4 என்பது குறிப்பிடத்தக்ககது.

மக்களே! இன்றே கடைசி நாள்

பூர்த்தி செய்யப்பட்ட SIR விண்ணப்பப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 11) முடிவடைகிறது. எனவே இதுவரை யாராவது SIR விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்யவில்லை என்றால், உடனடியாக வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து இன்று (டிசம்பர் 11) BLO-க்கள் அல்லது வாக்காளர் உதவி மையத்தில் சமர்ப்பியுங்கள்.

படிவத்தை எங்கே சமர்ப்பிப்பது?

உங்கள் பகுதியின் வாக்குச்சாவடி நிலை அலுவலர் (BLO) மூலமாக நேரடியாகச் சமர்ப்பிக்கலாம்.

உங்கள் வாக்காளர் பட்டியல் பதிவு அலுவலகத்தில் (Electoral Registration Officer - ERO) சமர்ப்பிக்கலாம்.

SIR படிவம் எச்சரிக்கை

படிவத்தை இன்று சமர்ப்பிக்கத் தவறினால், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் பட்சத்தில், நீங்கள் மீண்டும் விண்ணப்பித்து நீண்ட செயல்முறையைக் கடக்க வேண்டியிருக்கும்.

முக்கிய வேண்டுகோள்

கால அவகாசம் நீட்டிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. உங்கள் குடியுரிமை உரிமையான வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்த, தாமதமின்றி இன்றே உங்கள் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.

தமிழகம் SIR நிலவரம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் தகவலின்படி, தமிழ்நாட்டில் விநியோகிக்கப்பட்ட SIR படிவங்களில் 99.27% இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

வரைவு வாக்காளர் பட்டியல் எப்போது?

பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பித்த வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 அன்று வெளியிடப்படும்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

SIR பணிகள் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், வாக்காளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தேர்தல் ஆணையம் இயந்திரத்தனமான பதில்களையே கொடுப்பதாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

எஸ்ஐஆர் (SIR) என்றால் என்ன?

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) என்பது இந்திய தேர்தல் ஆணையத்தால், வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கும், துல்லியமாக்குவதற்கும் (Special Intensive Revision of Electoral Roll) மேற்கொள்ளப்படும் ஒரு முக்கியமான பணியாகும். முக்கிய அதன் நோக்கமானது வாக்காளர்கள் தங்கள் கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து திரும்ப வழங்கினால் மட்டுமே அவர்களின் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என்பதை உறுதி செய்வதே இந்தப் பணியின் முக்கிய நோக்கமாகும்.

எஸ்ஐஆர் (SIR) எதிர்ப்பு

SIR பணிகளுக்குத் தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து, பணியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. கடும் எதிர்ப்புக்கு மத்தியில், தமிழகத்தில் SIR பணிகள் கடந்த நவம்பர் 4 அன்று தொடங்கின.

எஸ்ஐஆர் (SIR) பணியின் முக்கிய அம்சங்கள்

கடைசி நாள்: இன்று டிசம்பர் 11, 2025

பணி: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் நீக்கப்படுவதைத் தவிர்க்க, நீங்கள் பெற்ற SIR கணக்கீட்டுப் படிவத்தை (Enumeration Form) பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

யாருக்கு: தமிழ்நாட்டில் SIR படிவம் வழங்கப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் இது பொருந்தும்.

வரைவுப் பட்டியல்: பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களைச் சமர்ப்பிப்பவர்களின் பெயர்கள் மட்டுமே டிசம்பர் 16 அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும்.

மேலும் படிக்க - SIR: வாக்காளர்களுக்கு நற்செய்தி... காலக்கெடுவை நீட்டித்த தேர்தல் ஆணையம்

மேலும் படிக்க - உறவினர் பெயர் கட்டாயமில்லை: வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க அவகாசம்?

மேலும் படிக்க - SIR குறித்து தமிழ்நாடு பூத் நிலை அதிகாரிகளுக்கு (BLO) முக்கியத் தகவல்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Shiva Murugesan

Shiva Murugesan

...Read More

Trending News