கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் மூன்று காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகளின் நலன் கருதி மூன்று நாட்களுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது, இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த பேரிஜம் ஏரியில் மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் இயற்கை எழில் மிகு சுற்றுலா தலங்கள் அமைந்து இருப்பதால், சுற்றுலாப்பயணிகள் இந்த பேரிஜம் ஏரிக்கு சென்று வருவதற்கு நுழைவு கட்டணம் செலுத்தி செல்கின்றனர். மேலும் குறைந்த அளவிலான வாகனங்கள் மட்டும் பேரிஜம் ஏரி பகுதிக்கு வனத்துறை அனுமதித்து வருகிறது.
இந்நிலையில் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் 3 காட்டு யானைகள் நேற்று முதல் பேரிஜம் ஏரி அருகே முகாமிட்டு இருப்பதால், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி ஞாயிற்றுக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை (22.06.2025 - 24.06.2025) மூன்று நாட்கள் சுற்றுலாப்பயணிகள் செல்ல வனத்துறை தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
மேலும் யானைகளின் நடமாட்டத்தையும் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அதே போல இன்று வார விடுமுறை காரணமாக, பேரிஜம் ஏரிக்கு செல்ல இருந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | மதுரை முருகப் பக்தர்கள் மாநாடு... இது பாஜகவின் தேர்தல் வியூகமா? - பின்னணி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ