நாளை 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் இருக்கு! உஷார் மக்களே

Tamil Nadu Weather Latest Update: நாளை (ஜனவரி 24) சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.  

Written by - R Balaji | Last Updated : Jan 23, 2026, 03:29 PM IST
  • நாளை 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
  • சென்னையிலும் மழை இருக்கு
  • வானிலை ஆய்வு மையம்
நாளை 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னையிலும் இருக்கு! உஷார் மக்களே

Rain Alert: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலையாக இருந்த நிலையில், நேற்று (ஜனவரி 22) முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இன்று சென்னையின் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நாளை தமிழகத்தின் சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Add Zee News as a Preferred Source

Chennai Meteorological Department Latest Update: வானிலை ஆய்வு மையம் அப்டேட்

இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை வளிமண்டல அலை (Easterly waves) நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
23-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Rain Alert Including Chennai: நாளை சென்னை உட்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் 

24-01-2026: கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜனவரி 26 வரை மழை தொடரும்

25-01-2026: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

26-01-2026: உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-01-2026 முதல் 29-01-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதல்: 23-01-2026 மற்றும் 24-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. எனினும் ஓரிரு இடங்களில் சற்று குறையக்கூடும்.

இயல்பு நிலையிலிருந்து குறைந்தபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 23-01-2026 மற்றும் 24-01-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.

Chennai Weather Latest Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை 

இன்று (23-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (24-01-2026 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க: பிரதமர் vs முதல்வர் | NDA-வின் துரோகங்கள் - மோடிக்கு ஸ்டாலின் நறுக் கேள்விகள்!

மேலும் படிக்க: சென்னை மக்களே... வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில் எப்போது? - வந்தாச்சு குஷியான செய்தி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News