LPG Cylinder Supply: நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாகக் கொண்டு தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் செயல்பட்டு வருகிறது. இந்த சம்மேளனத்தில் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
LPG Cylinder: 4 ஆயிரம் லாரிகள்
இந்த சூழலில், நாமக்கல்லில் தென்னிந்திய எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுந்தரராஜன் இன்று (மார்ச் 26) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகா ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள சுமார் 4 ஆயிரம் லாரிகளை துறைமுகத்தில் இருந்து எரிவாயு பாட்டிலிங் பிளான்டுக்கு டேங்கர்களில் எரிவாயுவை எடுத்து வரும் பணியை மேற்கொண்டு வருகின்றன.
LPG Cylinder: எக்கச்சக்க கட்டுப்பாடுகள்
2025ஆம் ஆண்டு முதல் 2030ஆம் ஆண்டு வரையிலான புதிய ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டன. இதில் இரண்டு அச்சு லாரிகளை பயன்படுத்தக் கூடாது; மூன்று அச்சு லாரிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மாற்று ஓட்டுனர் அல்லது கிளீனர்கள் இல்லாதபட்சத்தில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்; ஏதேனும் சிறு விபத்து ஏற்பட்டால் அந்த லாரிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு டெண்டரில் பங்கேற்க முடியாது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த விதிமுறைகளால் டேங்கர் லாரிகளை இயக்கமுடியாத நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
LPG Cylinder: காலவரையற்ற வேலை நிறுத்தம்
மூன்று கட்டங்களாக எண்ணெய் நிறுவனங்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. அதனால் தென்மண்டல அளவில் நாளை (மார்ச் 27) வியாழக்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
LPG Cylinder: வேலை வாய்ப்புக்காக போராட்டம்...
இதன் மூலம், தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகா ஆந்திரா, புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும். தென் மண்டலம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள டேங்கர் லாரிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட முன்வந்துள்ளன. வருவாய் இழப்பை காட்டிலும் வேலை வாய்ப்பு பறிப் போகக் கூடாது என்ற எண்ணத்திலேயே இந்தப் போராட்டத்தை தொடங்கி உள்ளோம். எண்ணெய் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் வரை வேலை நிறுத்த போராட்டம் தொடரும்" என தெரிவித்தார்.
LPG Cylinder: எல்பிஜி சிலிண்டருக்கு தட்டுப்பாடு வரலாம்
எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் திடீர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் எந்தவொரு எல்பிஜி டேங்கர் லாரிகள் நாளை முதல் இயங்காது. இதனால் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்கள்.
மேலும் ஏப். 1ஆம் தேதி முதல் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் உள்ளிட்டவற்றின் விலையில் மாற்றம் நிகழலாம் என கூறப்படுகிறது. பள்ளி விடுமுறை காலம், கோடைக்காலம் உள்ளிட்ட காரணங்களால் சிலிண்டர்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
LPG Cylinder: எல்பிஜி சிலிண்டர் விலை
சென்னையை பொறுத்தவரை, 14 கிலோ கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.818.50 என்ற விலையிலும், 19.5 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் ரூ.1,965 என்ற விலையிலும் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | LPG Cylinder | ஜாக்பாட் அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ