வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விதிகள்!

தமிழ்நாட்டில் வீட்டு வாடகை தொடர்பான சட்டங்களில் சில புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் இருவருக்கும் முக்கியமானவை.  

Written by - RK Spark | Last Updated : Feb 15, 2026, 06:34 PM IST
  • வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்?
  • கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விதிகள்!
  • முழு விவரம் இதோ!
வாடகை வீட்டில் குடியிருப்பவரா நீங்கள்? கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 5 விதிகள்!

வாடகைக்கு வீடு தேடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. அதிலும் குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் வாடகைக்கு வீடு தேடி குடி பெயர்வது பெரும் சிக்கலான ஒன்றாகவே இருந்து வருகிறது. அப்படியே வாடகை வீட்டிற்கு சென்றாலும் ஓனருக்கும், வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும் இடையே பிரச்சனைகள் வருவது சகஜமான ஒன்றுதான். இந்நிலையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கும், வீட்டை வாடகைக்கு விட்டிருக்கும் உரிமையாளர்களுக்கும் இடையே இருக்கும் சில பிரச்சினைகளை தீர்க்கவும், வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஏற்கனவே இது தொடர்பான விதிகள் இருந்தாலும் அதில் சில மாற்றங்களையும் தற்போது மேற்கொண்டுள்ளனர். இவற்றை வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க: பிப்ரவரி 17-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் இயங்காது? வெளியான முக்கிய அறிவிப்பு!

வாடகை ஒப்பந்தம் 

தற்போது வரை பலரும் மாத வாடகை மற்றும் அட்வான்ஸ் போன்றவற்றை வாய்மொழியாகவே பேசிக் கொள்கின்றனர். ஆனால் இனி வீடு அல்லது கடை எதுவாக இருந்தாலும் உரிமையாளர்களுக்கும் வாடகைதாரர்களுக்கும் இடையே எழுத்து பூர்வமான ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது கட்டாயம். வெறும் ஒப்பந்தம் மட்டுமில்லாமல் அதனை வாடகை ஆணையத்திலும் பதிவு செய்ய வேண்டும். 11 மாதங்களுக்கு மேல் உள்ள ஒப்பந்தங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது. அப்படி இல்லாமல் அனைத்து வகையான வாடகை ஒப்பந்தங்களும் இனி பதிவு செய்ய வேண்டும். 

அட்வான்ஸ் தொகை 

வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு ஏற்படும் பெரும் சுமை அட்வான்ஸ் தான். பலரும் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை வாடகைக்காண அட்வான்ஸ் பெறுகின்றனர். ஆனால் இதிலும் வரைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் அதிகப்படியான அட்வான்ஸ் தொகையை கேட்க முடியாது. புதிய விதிகளின்படி மூன்று மாத வாடகை தொகை மட்டுமே அட்வான்ஸ் ஆக பெற வேண்டும். இது வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது. 

வாடகை உயர்வு 

இனி வீட்டு உரிமையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்த முடியாது. அப்படி வாடகையை உயர்த்த வேண்டும் என்றால் வீட்டில் குடியிருப்பவர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு எழுத்துப்பூர்வமாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அதேபோல வாடகையை பெறும்போது அதற்கான ரசீதையும் வீட்டில் வசிப்பவர்களுக்கு உரிமையாளர்கள் கொடுக்க வேண்டும். வங்கிகளில் செலுத்தினாலோ அல்லது நேரடியாக பணமாக கொடுத்தாலோ, எப்படி இருந்தாலும் ரசீது கட்டாயம். 

காலி செய்வதற்கான விதிகள் 

வீட்டின் உரிமையாளர் வாடகை இருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்ல முடியாது. அவர்களுக்கு உரிய காலம் கொடுக்க வேண்டும். குடியிருப்பவர்கள் தொடர்ந்து வாடகை கொடுக்காமல் இழுத்து அடித்து வந்தால், உரிமையாளர்களுக்கு வீட்டை காலி செய்ய சொல்ல உரிமை உள்ளது. மேலும் ஒப்பந்த காலம் முடிந்து வீட்டை காலி செய்யவில்லை என்றால் வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவர்களிடம் இரட்டிப்பாக வாடகையை வசூலிக்கலாம். அதற்கு ஏற்றவாறு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. 

வீட்டின் பராமரிப்பு செலவுகள் 

வீட்டிற்கு குடியேறும் முன் வீட்டின் பராமரிப்பு பணிகளுக்கான செலவுகள் குறித்தும் அக்ரிமெண்டில் எழுதப்பட வேண்டும். பெரிய அளவிலான பழுதுகள் போன்றவற்றை வீட்டின் உரிமையாளர்கள் தான் செய்ய வேண்டும். அதே சமயம் குழாய்கள் மாற்றுவது போன்ற சிறு சிறு வேலைகளை வாடகைதாரர்கள் மேற்கொள்ள வேண்டும். அவசர தேவைகளுக்கு வீட்டில் குடியிருப்பவர்கள் செலவு செய்தால் அதனை வாடகையில் கழித்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க: PHH, PHH-AAY ரேஷன் கார்டு: பிப். 25-க்குள் இதைச் செய்யத் தவறாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Trending News