பக்தர்களே அலர்ட்! பழனி முருகன் கோயிலில் மேஜர் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

Palani Murugan Temple Rope Car Service Update: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி காரணமாக நாளை ஒருநாள் (ஜனவரி 21) நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - Umabarkavi K | Last Updated : Jan 20, 2026, 06:52 PM IST
  • பழனி முருகன் கோயில் செல்பவர்கள் கவனத்திற்கு
  • நாளை ரோப் கார் சேவை ரத்து
  • பக்தர்களே நோட் பண்ணுங்க
பக்தர்களே அலர்ட்! பழனி முருகன் கோயிலில் மேஜர் மாற்றம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

Palani Murugan Temple Rope Car Service Update: தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் இருக்கிறார். முருகனின் அறுபடை வீடுகளுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் முருகனுக்கு அறுபடை கோயில்கள் உள்ளன. இதில் மூன்றாம் படை வீடாக பழனி தண்டயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். 

Add Zee News as a Preferred Source

பழனி முருகன் கோயில்

குறிப்பாக, முருகனுக்கு உகந்த விசேஷ தினங்களான கிருத்திகை, தைப்பூசம், பங்குனி, சூரசம்ஹாரம், கந்த சஷ்டி உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் படிக்கட்டுப் பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவையை பயன்படுத்தி மலைக் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில் மின் இழுவை ரயில், ரோப் காரில் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அவ்வப்போது பழனி கோயில் நிர்வாகம் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ரோப் காரின் பராமரிப்பு பணிகள் காரணமாக,   வருடத்திற்கு ஒரு மாதம் நிறுத்தப்படுவது, மாதத்திற்கு ஒரு நாளும் நிறுத்தப்படுவது வழக்கம்.

நாளை ரோப் கார் சேவை ரத்து

அந்த வகையில், ஜனவரி 21ஆம் தேதியான நாளை ரோப் கார் சேவை நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. ரோப் காரின் கம்பி, உருளைகள் மாற்றப்பட்டு மீண்டும் பக்தர்கள் சேவைக்கு செயல்படுத்தப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதனால் பக்தர்கள்  மின் இழுவை ரயில், படிப்பாதைகளை,பயன்படுத்திக் கொள்ளுங்கள் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

63 நாட்களில் 36 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் 

அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர் கடந்த நவம்பர் 17ஆம் தேதி பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளனர் டிசம்பர் 15ஆம் தேதி வரை 29 நாட்களில் 12 லட்சத்து 54 ஆயிரத்து 963 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். டிசம்பர் 16 முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை  30 நாட்களில் 18 லட்சத்து 87 ஆயிரத்து 188 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து, ஜனவரி 15ஆம் தேதி 91 ஆயிரத்து 316 பேர் 16ஆம் தேதி 86 ஆயிரத்து 292 பேர் 17ஆம் தேதி 89 ஆயிரத்து 734 பேரும், ஜனவரி 18ஆம் தேதி 5 ஆயிரத்து 405 பேர் என கடந்த 63 நாட்களில் 35 லட்சத்தி 4 ஆயிரத்து 898 பேர் சுவாமி தரிசனம் செய்தனர். 

எனவே வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி பழனி முருகன் கோயிலின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு பாதயாத்திரை ஆக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். எனவே கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மலைக் கோயிலுக்கு செல்லும் பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு! பெண்களுக்கு வட்டியில்லா கடன் - முழு விவரம்

மேலும் படிக்க: ஓசூர் விமான நிலையத்தை தடுக்க... சந்திரபாபு நாயுடு போடும் தனி கணக்கு - பின்னணி என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News