பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு! ரூ.5000 மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

மாதம் ஆயிரம் ரூபாய் பெரும் மகளிர் உரிமைத்தொகை மிகப் பெரிய வெற்றிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 14, 2026, 07:00 AM IST
  • பெண்களுக்கு 'ஜாக்பாட்' செய்தி!
  • கிரைண்டர் வாங்க ரூ.5000 மானியம்.
  • தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!
பெண்களுக்கு முக்கிய அறிவிப்பு! ரூ.5000 மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

பெண்கள் சுயமாக சம்பாதிக்கவும், அவர்களது பொருளாதார சூழ்நிலையை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து பயணம், தோழி விடுதி என பல்வேறு திட்டங்களை கடந்த சில ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறது. இதில் மாதம் ஆயிரம் ரூபாய் பெரும் மகளிர் உரிமைத்தொகை மிகப் பெரிய வெற்றிகரமான திட்டமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் இந்த திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கு மற்றொரு கூடுதல் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கிரைண்டர் வாங்க மானியம் 

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு கிரைண்டர் வாங்க தமிழக அரசு ரூபாய் 5000 மானியமாக வழங்குகிறது. இது தொடர்பான அறிவிப்பை ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த பெண்கள் யாருடைய துணையும் இல்லாமல் தங்களை சொந்த காலில் நின்று சுயமாக சம்பாதிக்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக கைம்பெண்கள், விவாகரத்து ஆனவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு சுய தொழில் தொடங்கவும், தங்கள் சொந்த காலில் இருக்கவும் இந்த திட்டம் மிகவும் உதவிகரமாக இருக்கும். 

இந்த ஆண்டில் இந்த திட்டத்தின் கீழ் ரூபாய் 10,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள கிரைண்டர் வாங்குவதற்கு அதன் மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது ரூபாய் 5000 தமிழக அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படும். நீங்கள் 15,000க்கு ஒரு கிரைண்டர் வாங்குகிறீர்கள் என்றால், அதில் 5000 ரூபாய் மானியமாக வழங்கப்படும். நீங்கள் 10,000 மட்டும் செலுத்தினால் போதும்.

தகுதிகள் என்ன?

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க நீங்கள் தமிழகத்தை சேர்ந்த பெண்ணாக இருக்க வேண்டும். உங்களது வயது 25திற்கு மேல் இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கும் மேல் இருக்கக் கூடாது. கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வருமான வரிச் சான்றிதழ் போன்றவை தேவை. 

எப்படி விண்ணப்பிப்பது?

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெண்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டம் தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க | திருவள்ளூர் மாவட்ட இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அறிவிப்பு - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News