வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் எதிரொலியாக, 'ஆரஞ்சு அலர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, நவம்பர் 18 செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: ஆட்டம் காட்டப்போகும் மழை! சென்னையில் இன்று முதல் சம்பவம்.. வெதர்மேன் கொடுத்த அலர்ட்
#WeatherUpdate | ஆரஞ்சு அலர்ட்!#ChennaiRains #TNRains #Weather #Rain #Rainupdate #RainAlert #news #ZeeTamilNews pic.twitter.com/ctRkZZbqcZ
— Zee Tamil News (@ZeeTamilNews) November 17, 2025
புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் நவம்பர் 22 ஆம் தேதி ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, உருவான பிறகு மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
விடுமுறை அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு
மழையின் தீவிரத்தை பொறுத்து, அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் முழு அதிகாரமும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மழையின் அளவு, பாதிப்பின் தீவிரம், மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடுவார்கள்.
தற்போதைய நிலை என்ன?
தற்போது வரை, தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கும் அதிகாரப்பூர்வமாக விடுமுறை அறிவிக்கப்படவில்லை. மழையின் தாக்கத்தை பொறுத்து, இரவிலோ அல்லது அதிகாலையிலோ மாவட்ட நிர்வாகங்களிடம் இருந்து அறிவிப்புகள் வெளியாகலாம். எனவே, கனமழை பாதிப்பு உள்ள மாவட்டங்களில் நாளை நவம்பர் 18 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட வாய்ப்புள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், தங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் படிக்க: Shutdown: மக்களே அலெர்ட்! நாளை செவ்வாய்க்கிழமை இந்த இடங்களில் மின்தடை இருக்கும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









