)
Amit Shah, Minister Raghupathi : மறைந்த முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலிமாறனின் 92வது பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்ட திமுகவினர் முரசொலி மாறனின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பேசிய அமைச்சர் ரகுபதி, ஆளுநர் தமிழ்நாட்டில் இருப்பதையே அவர் மறந்து விடுகிறார். தான் பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு அவர் எப்போதும் பேசுவதை விளக்கமாகக் கொண்டுள்ளார். தமிழ்நாட்டு மாணவர்கள் தான் இன்று அகில இந்திய அளவில் உயர் படிப்பில் சாதித்து வருகின்றனர் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் நிலைமை அவருக்கு புரியாது என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ரகுபதி, எடப்பாடி பழனிச்சாமி இன்று பாஜகவின் கொத்தடிமை. அவர் சொல்வதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திராவிட மாடல் ஆட்சியினுடைய இரண்டாம் பாகம் மூன்றாம் பாகமும் தொடரும் பொன்னியின் செல்வனைப் போல தொடர்ந்து கொண்டே இருக்கும். அமித்ஷா தமிழ்நாட்டுக்கு வந்துட்டு போகட்டும், அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. அவர்களால் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கவே தடுமாறுகிறார்கள். அவர்கள் எப்படி தேர்தல் களத்தில் சாதிக்கப் போகிறார்கள். அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என கூறினார்.
அமலாக்கத்துறை சோதனை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தற்போது மிரட்டல் படலத்தை தொடங்கி இருக்கிறார்கள். ஐ பெரியசாமி வீட்டில் நடந்த சோதனையை போல் இன்னும் எத்தனை சோதனைகள் நடந்தாலும் அந்த மிரட்டலுக்கு திமுக எந்த காலத்திலும் அஞ்சாது. நாங்கள் எங்கள் தேர்தல் பணிகளை சிறப்பாக தொடங்கி விட்டோம் என்பதை இந்தியா அறிந்துள்ளது. ஒன்றிய அரசின் உளவுத்துறை திமுகவினர் சிறப்பாக பணி செய்து வருகின்றனர். அவர்களை ஈடு செய்யும் அளவிற்கு யாராலும் முடியாது என்று சொல்லும் அளவிற்கு வாக்காளர்களையே உறுப்பினர்களாக சேர்த்து இன்று தேர்தல் பணியை சிறப்பாக கொண்டு சென்று வருகின்ற இயக்கமாக திமுக கூட்டணி இருக்கிறது என கூறினார்.
சட்டமன்ற விடுதியில் சோதனைக்கு செல்ல வேண்டும் என்றால் சட்டமன்ற செயலாளரின் அனுமதி வேண்டும். அனுமதி இன்றி சென்று அங்கு உள்ள அறைகளை உடைப்பதற்கு அமலாக்க துறைக்கு எந்தவிதமான உரிமையும் கிடையாது. அனுமதி பெற்று தான் செல்ல வேண்டும். அனுமதி இல்லாமல் அவர்கள் அத்துமீறுகின்ற பொழுது அதை கண்டிக்கின்ற கடமை திமுக தொண்டர்களுக்கு உண்டு என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. திராவிட மாடலா ஆட்சியினுடைய இரண்டாம் பாகம், மூன்றாம் பாகமும் தொடரும், பொன்னியின் செல்வனைப் போல தொடர்ந்து கொண்டே இருக்கும். அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்துட்டு போகட்டும். அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. அவர்களால் வாக்குச்சாவடி முகவர்களையே நியமிக்க தடுமாறுகிறார்கள். அவர்கள் எப்படி தேர்தல் களத்தில் சாதிக்கப் போகிறார்கள். அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் எங்களுக்கு அச்சமில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நாங்கள் போலி வாக்காளர்களை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அசல் வாக்காளர்கள் அசலாக வாக்களித்தாலே போதும். போலி வாக்காளர்கள் எங்களுக்கு தேவையில்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ