பெண்கள் பாதுகாப்பிற்காக விரைவில் வருகிறது அம்மா பேட்ரோல்!

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துள்ளது!

Last Updated : Aug 14, 2019, 10:00 AM IST
பெண்கள் பாதுகாப்பிற்காக விரைவில் வருகிறது அம்மா பேட்ரோல்! title=

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துள்ளது!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக தனிப்பிரிவு ஒன்றை ஏற்படுத்தி மாவட்டந்தோறும் தனி அதிகாரிகளை நியமிக்கப்பட்டு மகளிர் காவல் நிலையங்களுடன் இணைத்து செயல்பட்டு வருகிறது. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக புதிதாக ஏற்படுத்தப்பட்ட இந்த காவல்துறைப் பிரிவில் உள்ள காவல் நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பிரத்யேகமாக பிங்க் நிற ரோந்து வாகனங்களை உருவாக்கியுள்ளனர். தமிழகத்தில் இத்திட்டம் ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி குழந்தைகளுக்காக 1098 என்ற எண்ணிலும், பெண்களுக்காக 1091 என்ற எண்ணும் வழங்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக சென்னையில் 35 ரோந்து வாகனங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. அடுத்த வாரம் இந்த ரோந்து வாகனத்தை ஒப்படைக்க உள்ளது. கேரளாவில் ஏற்கனவே இத்திட்டம் பிங்க் ரோந்து வாகனம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. 

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கவும், வயதானவர்களுக்கு உதவவும் இந்த ரோந்து வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. கூடிய விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் காவல் நிலையங்களில் ’அம்மா பேட்ரோல்’ ரோந்து வாகனங்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Trending News