Minister Anbil Mahesh: மற்ற மாநிலங்களை போல தமிழக அரசு பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

Water Bell Scheme: வாட்டர் பெல் என்ற திட்டம் கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்பாட்டி உள்ளது. அதாவது, பள்ளி மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு ஒருமுறையும், 11.45 மணிக்கு ஒருமுறையும் மதியம் 2.30 மணிக்கு ஒருமுறையும் பெல் அடிக்கப்படும். அப்போது, மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் சோர்வடையாமல் இருப்பதை தடுக்க முடியும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளிலும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று, ஓசூரில் தமிழ்நாடு உருது தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த மாநாட்டின் வாயிலாக நாங்கள், ஆசிரியர்களிடம் நல்ல அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளோம். நம்முடைய திராவிட மாடல் அரசு பார்த்து பார்த்து எதை எல்லாம் செய்து கொடுக்க வேண்டுமோ அதை எல்லாம் நம்முடைய முதல்வர் செய்து கொடுத்து வருகிறார் என்றார்.
அரசு பள்ளிகளில் குழந்தைகள் தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வாட்டர் பெல் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கேள்விக்கு, இது ஒரு நல்ல திட்டம். கேரளாவில் இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. சுகாதாரம் உடல் நலம் என்று வரும்போது, இந்தியாவில் உலகத்திலேயே நமது தமிழக அரசு காலை உணவு திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி வருகிறது அதே நேரத்தில் இந்த வாட்டர் பெல் திட்டத்தை அரசு பள்ளிகளில் செயல்படுத்தவும் சுற்றறிக்கை விரைவில் அனுப்பப்படும்.
தமிழ்நாட்டில் 2381 மேற்பட்ட அரசு பள்ளிகளில் எல்கேஜி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் தன்னார்வத்துடன் எல்கேஜி வகுப்புகளை எடுத்து வருகின்றனர். ஓசூரில் பன்மொழி பேசக்கூடிய மக்கள் இருப்பதால் இந்த பகுதியை தனிக் கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளிலும் எல்கேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ