PMK Leader Anbumani Speech: பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குக்சாவடி குழுக்கள் அமைப்பது மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (ஜூன் 15) நடைபெறுகிறது.
Anbumani Speech: திமுக ஆட்சிக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டது
இந்த பொதுக்குழு கூட்டத்தின் மேடையில் பேசிய அன்புமணி, "சமூக நீதிக்கு தமிழ்நாடு அரசு துரோகியாக செயல்பட்டு வருகிறது. பாமக இடம்பெறும் கூட்டணிதான் 2026ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஆட்சியை அமைக்க உள்ளது. தற்போது திமுக ஆட்சிக்கு கவுண்டவுன் தொடங்கிவிட்டது.
வரும் ஜூலை 25ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாளில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை திருப்போரூரில் இருந்து தொடங்க உள்ளேன். இதில் 100 நாள்கள் நடைபயணம் மேற்கொள்ள உள்ளேன். பாமகவுக்கு இன்னும் வேகமாக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். வரும் 2026ஆம் ஆண்டில் ஆட்சி அதிகாரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்க வேண்டும். கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைப்பதற்கு பாமக உதவுவதால் எந்த பயனும் இல்லை. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அந்த ஆட்சியில் பாமக அங்கம் வகிக்கும்.
Anbumani Speech: எத்தனை வேலைவாய்ப்புகளை உருவாக்கியது திமுக?
திருவள்ளூரில் அறிவு சார் நகரம், சிப்காட் இடம் தேர்வு என விவசாய நிலங்களை அழித்து அரசு உருவாக்குகிறது என்கிறார்கள். விவசாயத்தை அழித்து உருவாகும் வளர்ச்சி எப்படி வளர்ச்சியாக இருக்கும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தற்போது ஆட்சியில் அதிகரித்துவிட்டது. படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை.
போதைப்பழக்கம் அதிகரிக்கிறது. சேலத்தில் 6 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என தெரிவித்த திமுக இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளது. எவ்வளவோ குளறுபடிகள் உள்ளன அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
Anbumani Speech: ராமதாஸிடம் மன்னிப்பு கேட்ட அன்புமணி
இன்று தந்தையர் தினம், மருத்துவர் ராமதாஸ் அவர்களுக்கு எனது தந்தையர் தின வாழ்த்துக்கள். ஐயா 100 வருடம் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். என் மீது ஏதேனும் கோபம் இருந்தால் ஐயா அவர்கள் மன்னிக்க வேண்டும். தந்தையிடம் மன்னிப்பு கேட்பது ஒன்று பெரிதல்ல. உங்களை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வது எனது கடமை. ஐயா அவர்கள் வருத்தப்படாதீர்கள், கோபப்படாதீர்கள், நீங்கள் உருவாக்கிய கட்சி இது இன்று நீங்கள் தேசிய தலைவர். பிரதமர் மோடி வந்து சொன்ன வார்த்தைகள் எல்லாம் நான் மறக்க முடியாது. இந்தியாவில் மூத்த அரசியல் தலைவர் ராமதாஸ் என மோடி பாராட்டி இருந்தார்" என பேசினார்.
மேலும் படிக்க | இளைஞர்களுக்கு குட் நியூஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய இலவச அறிவிப்பு
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்போது வரும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ