வெறும் 2708 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதா? அன்புமணி கண்டனம்!

Anbumani Ramadoss : 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Oct 7, 2025, 06:46 PM IST
வெறும் 2708 உதவிப் பேராசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதா? அன்புமணி கண்டனம்!

Anbumani Ramadoss : தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரம் உதவி பேராசியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், 2708 காலி இடங்கள் நிரப்பப்படும் என அமைச்சர்  கோ.வி செழியன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், 10 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில் 2708 இடங்களை மட்டும் நிரப்புவதா? உயர்கல்வித் துறையை சீரழித்த குற்றத்திலிருந்து திமுக தப்ப முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Add Zee News as a Preferred Source

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2708 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள்  நிரந்தரமாக நிரப்பப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி செழியன் அறிவித்திருக்கிறார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் வெறும் 2708 இடங்களை மட்டும் நிரப்புவது கண்டிக்கத்தக்கது.

திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த நான்கரை ஆண்டுகளில் ஒரே ஒரு உதவிப் பேராசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. நான்கரை ஆண்டுகளில் 35 புதிய கல்லூரிகள் மற்றும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்களை திமுக அரசு ஏற்படுத்தியதாக விளம்பரம்  தேடிக்கொண்டாலும், அந்தக் கல்லூரிகளுக்கும், புதிய மாணவர் சேர்க்கை இடங்களுக்கும் ஒரே ஒரு உதவிப் பேராசிரியரைக் கூட நியமிக்கவில்லை.

அதனால் அரசு கலைக்கல்லூரிகளின் கல்வித்தரம் சீரழிந்திருக்கிறது. அரசு கலைக்கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை  நீட்டிக்கப்பட்ட போதிலும், அவற்றில்  சேர மாணவர்கள் தயாராக இல்லை என்பதும்,  அதனால் 25% இடங்கள் இன்னும் காலியாகக் கிடக்கின்றன என்பதும் தான் அரசு கல்லூரிகளின் அவலநிலைக்கு சான்று ஆகும்.

உயர்கல்வித்துறையை திமுக அரசு தொடர்ந்து சீரழித்து வருவதை மீண்டும், மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சி அம்பலப்படுத்தியதன் விளைவாகத் தான் இப்போது 2708 இடங்களை நிரப்ப தமிழக அரசு முன்வந்துள்ளது. தமிழக அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில்  9000 பணியிடங்கள்  காலியாக இருப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டது. அதன் பின்  ஓய்வு பெற்ற பேராசிரியர்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்ட பணியிடங்கள் ஆகியவற்றையும் சேர்த்தால் காலியிடங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கக்கூடும்.

2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே  4000  உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பல ஆண்டுகள் தாமதப்படுத்திய பிறகு கடந்த ஆண்டில் 4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்தேர்வு அறிவிக்கை கடந்த  ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால், இல்லாத காரணங்களைக் கூறி அந்த நியமனம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.  இந்த நேரத்தில் அதை விடக் குறைவாக  2708 பேர் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என திமுக அரசு  அறிவித்திருப்பதன் மூலம்  உயர்கல்விக்கு பெரும்  துரோகம் இழைத்துள்ளது.

தமிழ்நாட்டில் உயர்கல்வித்துறையை மீண்டும், மீண்டும் சீரழித்த குற்றத்திலிருந்து  திமுக அரசு தப்ப முடியாது. உயர்கல்வித்துறையின் நலனில் தமிழக முதலமைச்சருக்கு அக்கறை இருந்தால்  அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள  சுமார் 10 ஆயிரம் பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். அதில்  பல்கலைக்கழக மானியக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி கொண்ட கவுரவ விரிவுரையாளர்களுக்கு  உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: அடுத்த மூன்று நாட்களுக்கு.. இந்த 10 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!

மேலும் படிக்க: பழைய ஓய்வூதிய திட்டம்: வருமா, வராதா? கருப்பு பேட்ஜுடன் வந்த தலைமை செயலக பணியாளர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

 

About the Author

Trending News