முருகன் மாநாட்டிற்கு மதுரை வந்த பவன் கல்யாண்... பேசிய முக்கிய விஷயங்கள்!

எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சாது மிரண்டால் காடு்கொள்ளாது, உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப்பெருமான் தான் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சு!

Written by - RK Spark | Last Updated : Jun 23, 2025, 10:00 AM IST
  • உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை.
  • அதே நாகரீகத்தை நீங்கள் கடைபிடியுங்கள்.
  • ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேச்சு.
முருகன் மாநாட்டிற்கு மதுரை வந்த பவன் கல்யாண்... பேசிய முக்கிய விஷயங்கள்!

மதுரை பாண்டி கோவில் ரிங் ரோடு அருகே அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பேசியபோது, "மதுரைக்கு என்னை வரவழைத்தது முருகன். என்னை வளர்த்தெடுத்தது முருகன். எனக்கு துணிச்சல் தந்தது முருகன். மதுரைக்கும், முருகனுக்கும் நெருக்கம் அதிகம். முருகனின் முதல் படை வீடும், கடைசி அறுபடை வீடும் மதுரையில் தான் உள்ளன. மீனாட்சி அம்மன் தாயார் பார்வதியின் அம்சம். எனவே முருகனின் தாயாரும், மதுரையில் தான் உள்ளார். முருகப்பெருமானின் தந்தையான சிவபெருமான் முதல் தமிழ் சங்கத்துக்கு தலைமை ஏற்று மதுரையில் தான் இருந்தார். தாயும், தந்தையும், மகனும் இந்த மதுரையில் தான் இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த மதுரை மக்கள் எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும். இந்த புண்ணியத்தின் பலனாகவே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரை இங்கு அவதரித்தார். 

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதியவர்கள் விண்ணப்பிக்கும் முன் இந்த தவறை செய்துவிடாதீர்கள்

அவர் தென் தமிழ்நாட்டின் மாபெரும் தலைவர் ஆவார். மேலும் அவர் முருகனின் அவதாரமாக கருதப்படுகிறார். முத்துராமலிங்க தேவர் திருமகனாரின் சிலைக்கு அருகே மயில் சிலையும் வைக்கப்பட்டு உள்ளது. தேவர் உருவில் முருகன் மனிதனாக வாழ்ந்தார். எனவே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனாரை வணங்குகிறேன். இப்போது நாம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போகிறோம், தரிசனம் செய்கிறோம், குங்குமம் பெறுகிறோம். நமக்கு ஒளி தரும் மீனாட்சி அம்மன் கோவிலிலும் இருள் சூழ்ந்திருந்தது. நமக்கு குங்குமம் கொடுக்கும் மீனாட்சி அம்மன் கோவிலில், குங்குமம் கொடுக்க ஆள் இல்லை. கோவில் நொறுங்கி போய் இருந்தது. 

கன்னியாகுமரியில் இருந்து, காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக இருந்தது. இன்றும் அப்படியே இருக்கிறது. இனியும் அப்படியே இருக்கும். இதுதான் இந்த தெய்வீக பூமியின் பலன். முருகனின் வடிவத்தில் நமது அறம் தொடர்ந்து வளர்கிறது. அறம் என்பது என்ன? உலகை தீமை சூழும்போது, அதை முறியடிப்பது அறம். எல்லோரையும் சமமாக பார்ப்பது அறம். தீயவர்களை தண்டிப்பது, வதம் செய்வது அறம். அதன் பெயரே புரட்சி. அதனை செய்பவரே புரட்சி தலைவர். யாரை உலகின் முதல் புரட்சி தலைவர் முருக பெருமான். நாம் எல்லோரும் இங்கு முருக பெருமானுக்காக வந்திருக்கிறோம். அநீதியை அழித்ததால், அவர் புரட்சி தலைவர். சமமாக நடத்தியதால், அவர் புரட்சி தலைவர். 

ஒரு கட்சி தலைவர் கேட்கிறார். முருகன் மாநாட்டை ஏன் தமிழ்நாட்டில் நடத்துகிறீர்கள். உத்தரபிரசேதம், குஜராத்தில் நடத்த வேண்டியது தான் என கேட்டு பிரிவினையை ஏற்படுத்தப்பார்க்கிறார். இதுபோல், பலரும் கேள்வி கேட்கிறார்கள். இன்று முருகனை பார்த்து கேட்பார்கள், நாளை சிவபெருமான், அம்மனை பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிக மிக ஆபத்தானது. இந்த சிந்தனை நீண்ட காலமாக உள்ளது. நான் 14  வயதில் சபரி மலைக்கு போனேன். தைப்பூசத்தில் திருத்தணிக்கு போவதை பார்த்தவன். நான் சென்னை மையிலாப்பூரில் படித்தபோது, நெற்றில் பட்டையுடன் பள்ளிக்கு சென்றவன். சிறிது காலத்தில் மாற்றம் தெரிந்தது. அடுத 10 ஆண்டுகளில் நெற்றியில் விபூதி பூசுவதை கேள்வி கேட்டார்கள். எனவே, என் 14-வது வயதில் நான் இந்த கேள்விகளை எதிர்கொண்டவன். எல்லோருக்கும் இந்த சம்பவம் நடந்திருக்கும். நாம் யாரும் அதனை பெரிதுபடுத்தவில்லை.

இந்துக்கள் அமைதியானவர்கள், பண்பானவர்கள். ஒரு கிறிஸ்தவர் கிறிஸ்வதராக இருக்கலாம். ஒரு முஸ்லிம், முஸ்லிமாக இருக்கலாம். ஆனால், ஒரு இந்து இந்துவாக இருந்தாலே இவர்களுக்கு பிரச்சினை. ஒருவன், இந்துவாக இருந்து விட்டால், அவன் மதவாதி என்பது அவர்களின் போலி முகமாக உள்ளது. என் நம்பிக்கையை கொண்டாட எனக்கு உரிமை உள்ளது. அதனை கேட்க நீங்கள் யார்? உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரீகத்தை நீங்கள் கடைபிடியுங்கள். என் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. அவமரியாதையை செய்யாதீர்கள். முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், அரேபியாவில் இருந்து வந்த மதங்களை பற்றி இதே கேள்வியை நீங்கள் கேட்க முடியமா? அதற்கான துணிச்சல் உங்களுக்கு உண்டா? அதனால், எங்களை சீண்டி பார்க்காதீர்கள். சாது மிரண்டால் காடு கொள்ளாது.  

முருக பெருமான் உலகம் முழுவதும் பரந்திருந்தாலும், அவரது பாதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. எனவே தான் முருக பெருமானுக்கு மதுரையில் மாநாடு நடக்கிறது. இங்கு சிலர் நிறத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். நமக்கு நிறத்தில் எந்த பேதமும் இல்லை. கிருஷ்ண பகவான் கருப்பு, காளி மாதா கருப்பு. நாம் நிறத்தின் வழியாக பார்ப்பதில்லை. அகத்தின் வழியாக பார்க்கிறோம். ஆனால், இங்கு கருப்பு நிறத்தை  வைத்து கடவுளை சீண்டும் கூட்டம் உள்ளது.  முருகனை, கந்த சஷ்டி கவசத்தை கிண்டல் செய்தனர். அவர்களுக்கு, கிண்டல் செய்யும் உரிமை உள்ளது. அதனை ஜனநாயகம் கொடுத்துள்ளது. அவர்கள், என் கடவுளை கேலி செய்தனர், கலாச்சாரத்தை கேலி செய்தனர். என் பண்பாட்டை, பார்வையை கேலி செய்தனர். கேட்டால் இதனைத்தான் மதச்சார்பின்மை என்பார்கள். மற்றவர்கள் நம்பிக்கையை கொச்சைப்படுத்த அவர்கள் யார்?" என்று பேசியுள்ளார்.

மேலும் படிக்க | கீழடி வரலாறு, மத்திய அரசு அங்கீகரிக்க மறுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News