Anna University Sexual Assault Case Verdict: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளி ஞானசேகருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அரசு தரப்பு வழக்கறிஞர் மேரி ஜெயந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.
Anna University Sexual Assault Case: ஞானசேகரனின் மொபைல்...
அப்போது பேசியவர், "அதிகபட்சமாக ஆயுள் தண்டனை உடன் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த தீர்ப்பின் மூலம் எந்தவித சலுகைகளும் இல்லாமல் ஆயுள் தண்டனையை முழுவதுமாக ஞானசேகரன் அனுபவிக்க வேண்டும். இந்த வழக்கில் புலன் விசாரணை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 11 குற்றச்சாட்டுகளுக்கும் அரசு தரப்பில் வாய்மொழியாகவும் ஆவணப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அனைத்து குற்றச்சாட்டுக்கும் நீதிமன்றத்தில் அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆதாரங்கள் திருப்திகரமாக இருந்ததால்தான் இவ்வளவு பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு கிடைத்துள்ளது. ஞானசேகரன் செய்த குற்றத்திற்கு இதுவே உச்சகட்ட தண்டனை. மேலும், இந்த வழக்கில் முக்கிய சாட்சி என்றால் அது ஞானசேகரன் பயன்படுத்திய தொலைபேசிதான். அவர் சமூக வலைத்தளங்களில் எதையெல்லாம் பயன்படுத்தினார் உள்ளிட்டவைகள் சோதனை செய்ய தொலைபேசி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
Anna University Sexual Assault Case: ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி
அதன்படி, சம்பவ தினத்தன்று அந்த தொலைபேசியின் நடவடிக்கை தொடர்பாக ஆய்வு செய்ததில், அந்த தொலைபேசி Aeroplane Mode-ல் போடப்பட்டுள்ளது. அதனை உறுதி செய்யும் விதமாக ஏர்டெல் நிறுவனத்தின் நோடல் ஆபீசர் நீதிமன்றத்திற்கு வந்து தனது சாட்சியத்தை கொடுத்துள்ளார். இனிமேலும், இந்த வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும்.
அண்ணா பல்கலைக்கழகம் வழக்கில் ஒருவர் தான் குற்றவாளி. ஆதாரப்பூர்வமாகவும் அறிவியல் பூர்வமாகவும் அரசு தரப்பில் வாதிட்டு நிரூபித்துள்ளோம். நீதிமன்றம் அறிவித்துள்ள ரூ. 90 ஆயிரம் அபராதத்தை அந்த பெண்ணிற்கு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி சொல்லியுள்ளார்" என தெரிவித்தார்.
Edappadi Palanisamy: மீண்டும் கிளறும் எடப்பாடி பழனிசாமி!
இந்த சூழலில், இவ்வளவு வழக்கின் தீர்ப்பு வெளியான உடன் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கில் மற்றொருவருக்கு தொடர்பிருக்கும் வகையில், 'SIR-ஐ காப்பாற்றியது யார்?' என்ற கேள்வியுடன் ஒரு பதிவை போட்டுள்ளார். அந்த பதிவில்,"அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கின் குற்றவாளியான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ளது சென்னை மகளிர் நீதிமன்றம்.
இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு.
அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம்…
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) June 2, 2025
இந்த வழக்கில் குற்றவாளி திமுக ஞானசேகரனைக் காப்பாற்ற எத்தனையோ சித்து வேலைகளை செய்தது ஸ்டாலின் மாடல் திமுக அரசு. அத்தனையும் முறியடித்து, மக்கள் மன்றம் முதல் சமூக ஊடகங்கள் வரை தனது தொடர் போராட்டத்தால் இந்த வழக்கின் குற்றவாளிகளில் ஒருவனான திமுக அனுதாபி ஞானசேகரனுக்கு தண்டனையை சாத்தியப்படுத்தியுள்ளது அஇஅதிமுக.
Edappadi Palanisamy: அதிமுக ஆட்சிக்கு வந்ததும்...
பாதிக்கப்பட்ட மாணவியின் குரலாக அஇஅதிமுக தொடர்ந்து ஒலிக்கும் என்ற வாக்குறுதியை இன்றுவரை நிறைவேற்றி வருகிறோம். அதனால் தான் 'யார் அந்த SIR' என்ற முழுமையான நீதிக்கான கேள்வியை இன்றும் கேட்கிறோம். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அந்த SIR யார்? விசாரணையின் போதே எதற்கு அந்த SIR Ruled out செய்யப்பட்டான்? எதற்காக ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி என்று அவசர அவசரமாக இந்த வழக்கை முடிக்க முனைந்தது திமுக அரசு?
SIR-ஐ காப்பாற்றியது யார் ?. இந்த கேள்விகள் கேள்விகளாகவே நீண்ட நாட்கள் இருக்காது. அஇஅதிமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து பதில்களும் கிடைக்கத் தான் போகிறது. ஸ்டாலின் சாரே நினைத்தாலும், அந்த SIR-ஐ எந்த சாராலும் காப்பாற்ற முடியாது" என பதிவிட்டுள்ளார். அதாவது, இந்த வழக்கில் இது தொடர்பாக வேறு ஒரு நபர் உள்ளார் என்று பேசினால் அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக மாறும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் இந்த பதிவு பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
Minister Regupathy: அருவருப்பு அரசியல்...
இந்நிலையில், அமைச்சர் ரகுபதி வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தும் பதிலடி கொடுத்துள்ளார். அதில், "பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காக உண்மையான நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்த பழனிசாமியால்தான் அந்த வழக்கில் நீதிக் கிடைக்க 6 ஆண்டுகள் ஆனது. ஆனால் ஐந்தே மாதங்களில் பாதிக்கபட்ட பெண்ணுக்கு நீதிக் கிடைக்கச் செய்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்.
அந்த வயிற்றெரிச்சலில் என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம்போலத் தனது புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார் பச்சைப் பொய் பழனிசாமி. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி ஞானசேகரன்தான் என நீதிமன்றம் உறுதி செய்திருப்பதன் மூலம் தமிழ்நாட்டு மாணவிகளை அச்சுறுத்தி அவர்களைக் கல்விநிலையங்களுக்குச் செல்ல விடாமல் அச்சுறுத்த வேண்டும் எனும் அற்பபுத்தியோடு 'யார் அந்தச் சார்?' என அருவருப்பு அரசியல் செய்த பழனிசாமியின் இழிவான அரசியல் அம்பலப்பட்டிருக்கிறது.
Minister Regupathy: 'யார் அந்தச் சார்?' புரளி
"அமைச்சர்களுடன் படம் எடுத்ததற்காக முக்கியப் பிரமுகர்களுடன் தொடர்பு எனக் குற்றம்சாட்ட முடியாது" என உயர் நீதிமன்றமே தலையில் கொட்டிய போதும் திருந்தாமல் பெண்களை அச்சுறுத்தி அவர்களது படிப்பை முடக்க வேண்டும் என்பதற்காக 'யார் அந்தச் சார்?' என புரளியை வைத்து மலின அரசியல் செய்து வந்தார் பழனிசாமி.
உயர் நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலில் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வு குழுவும் தனது அறிக்கையிலும் ஞானசேகரன் யாருடனும் பேசவில்லை, அவனின் செல்போன் 'flight Mode'-ல் தான் இருந்ததும், அவன் யாருடனும் பேசவில்லை என்பதும் அறிவியல் ரீதியாக உறுதிப்படுத்தியது.
Minister Regupathy: திமுகவின் மீது களங்கம் சுமத்தவே...
பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதிப் பெற்று தருவதை விட இந்த நிகழ்வை வைத்து திமுகவின் மீது எப்படியாவது களங்கம் சுமத்தலாம் எனக் கேவலமான அரசியல் செய்து வந்த அற்பபுத்தி பழனிசாமியின் புரளி நாடகம் தோற்றுப் போனபோதும் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மீண்டும் அதே பொய்யை தூக்கி கொண்டு வந்திருக்கிறார் பச்சைப்பொய் பழனிசாமி" என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
மேலும், இல்லாத சார்களை உருவாக்கி இழிவான அரசியல் செய்யும் ஒரே சார் பழனிசாமி சார்தான் என்றும் இது போன்று பொய் புரளிகளை வைத்து பித்தலாட்ட அரசியல் செய்வதையே முழுநேர தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் பழனிசாமி இன்று போல் உண்மைகளால் தொடர்ந்து அவமானப்படப் போவது உறுதி என்றும் கடுமையாக சாடி உள்ளார்.
தமிழ்நாட்டு பெண்களின் உரிமைகளை உயர்த்தி அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் நுனியளவு சமரசத்திற்கு இடம்தராமல் ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில் பெண்களுக்குத் துன்பம் விளைவிக்கும் எந்தக் குற்றவாளியும் தப்ப முடியாது என்பதற்கு அண்ணா பல்கலைக்கழக வழக்கின் தீர்ப்பே சாட்சி என்றும் அமைச்சர் ரகுபதி அவரது அறிக்கையின் மூலம் உறுதியளித்துள்ளார்.
மேலும் படிக்க | ஞானசேகரனுக்கு என்ன தண்டனை? பரபரப்பான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்!
மேலும் படிக்க | சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் தவிடுபொடியாகியுள்ளது!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









