)
Annamalai News: கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், "தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் உரிய நேரத்தில் அறிவிக்கும்" என்றார். தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் திமுக அரசு முறைகேடுகளை செய்து மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும் அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
Annamalai News: Cvoter கருத்துக்கணிப்பு ஸ்டாலினுக்கு பின்னடைவு
மேலும், தமிழகத்தின் வளர்ச்சியும், பாஜகவின் வளர்ச்சியும் தான் தனக்கு முக்கியம் எனவும் அண்ணாமலை தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "அதிமுக தலைவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வரும் நிலையில் பாஜக அதிமுக கூட்டணி குறித்து தேசிய தலைமை உரிய நேரத்தில் அறிவிக்கும். சமீபத்தில் CVoters நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வெறும் 27 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. மோசமான முதல்வராக இருந்தாலும் கூட 40% மக்களின் ஆதரவு பெற்றிருப்பார்கள். இந்த எண்ணிக்கை முதல்வர் ஸ்டாலின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
Annamalai News: தமிழகம் வரும் பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் இலங்கையில் இருந்து நிகழ்வுகளுக்கு வருகிறார். ராமேஸ்வரத்தில் பாம்பனில் புதிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை திறப்பதோடு அடுத்தபடியாக அரசு நிகழ்விலும் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து மதுரை வழியாக டெல்லி செல்கிறார்.
Annamalai News: NREGA திட்டத்தில் அதிக நிதி
நூறு நாள் வேலை திட்டத்தை பொறுத்த வரை தமிழகத்தை விட பின்தங்கிய மாநிலங்களுக்கும் அதிக மக்கள் தொகை உள்ள மாநிலங்களுக்கும் அதிக கிராமங்கள் உள்ள மாநிலங்களுக்கும் வழங்கப்படும் நிதியை விட அதிகமாகவே தமிழகத்திற்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மகாராஷ்டிரா, தெலுங்கானா, சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதியை விட அதிகமாக 39 ஆயிரத்து 338 கோடி ரூபாய் அளவிற்கு தமிழகத்திற்கு இத்திட்டத்தில் நிதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியில் பல்வேறு முறைகேடுகளில் திமுக அரசு மற்றும் திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர். இதனை ஆய்வு செய்ய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு நிதி தணிக்கை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
Annamalai News: நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்றங்கள்
தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் வழக்குகள் குறைந்துள்ளதாக முதல்வர் தெரிவிக்கிறார். ஆனால் எந்த தகவலின் அடிப்படையில் இந்த கருத்தை அவர் தெரிவிக்கிறார் என தெரியவில்லை. தமிழகத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவரம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அவர் கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது" என தெரிவித்தார்.
Annamalai News: அதிமுக உடன் கூட்டணியா...?
மேலும், அதிமுக குறித்து கூறிய கருத்துக்களில் எந்த மாற்றம் இல்லை எனவும், பாஜக தேசிய தலைமை எடுக்கும் முடிவு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் என்றார். மேலும், அதற்கு ஒரு தொண்டனாகவும் எப்போதும் துணை நிற்பேன் என அண்ணாமலை தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ