)
Annamalai Latest News Updates: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் மரணம் அடைந்ததை தொடர்ந்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள பிரேமலதாவின் இல்லத்திற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்று பிரேமலதாவுக்கும், அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, வெளியே வந்தபோது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தமிழ்நாட்டில் எல்லோரும் இந்த இடத்தில் செல்ல உரிமை இருக்கிறது. இதை பெருசுப்படுத்தி எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் போகலாம்?. என்னை பொறுத்தவரை டிஜிபி அலுவலகத்தில் அனுமதி கேட்டுவிட்டு செல்ல வேண்டிய நிலை தமிழகத்தில் தற்போது உள்ளது.
அவர்கள் பாதுகாப்பை அவர்களிடம் பார்த்துக் கொள்ள வேண்டும். விஜய் கரூருக்கு வரவேண்டும் என்று நினைத்தால் வரலாம். யார் வேண்டுமானாலும் வரலாம். நான் அந்த ஊர்க்காரன் தான். முதல்வர் தொடங்கி கமலஹாசன் வரை எல்லோரும் வந்துள்ளனர். எங்கள் ஊருக்கு வந்து மக்களை சந்திக்கலாம். யாரை பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களை நீங்கள் பார்க்கலாம். கரூருக்கு போவதே அச்சுறுத்தல் என்ற எண்ணத்தை இது உருவாக்கும். கரூர் பாதுகாப்பான ஊர்" என்றார்.
மேலும், தமிழக வெற்றி கழகத்தின் கொடி எடப்பாடி பழனிச்சாமி கூட்டத்தில் காட்டப்பட்டது குறித்தும், தவெக கூட்டணிக்கு வருவது போல பிள்ளையார் சுழி என்று சொல்கிறார் ஈபிஎஸ் என்ற கேள்விக்கு, "என்னுடைய நிலைப்பாடு ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். எல்லாருடைய சித்தாந்தங்களும் வேறு வேறு பாதையில் இருக்கும்போது, அவர்கள் ஒரு லைனில் இருக்கிறார்கள். நாங்கள் ஒரு லைனில் இருக்கிறோம், அது எந்த அளவுக்கு ஒருங்கிணையும் என்று தெரியவில்லை, பொறுத்திருப்போம். 2026 தேர்தலுக்கு இன்னும் நீண்ட தூரம் இருக்கிறது. யார் யாருடன வருவார்கள் காலம் தான் பதில் சொல்லும். தேர்தலுக்கும், கூட்டணிக்கும் இன்னும் நேரம் அதிகமா இருக்கிறது" என்றார்.
தொடர்ந்து விசிக தொண்டர்கள் சாலையில் வழக்கறிஞரை தாக்கிய சம்பவம் குறித்து பேசிய அண்ணாமலை, " திருமாவளவனுக்கு Z பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறீர்களே...? எதற்கு மக்களை அடிப்பதற்காக...? திருமாவளவன் பாதுகாப்பு கொடுப்பது மக்களை அடிப்பதற்காக...?
ரோட்டில் செல்லும்போது சாலையில் வந்த ஒருவர் இடித்துவிட்டார், அப்போது அவரை போட்டு அடிக்கிறார்கள். சமீபத்தில் அவரது தொண்டர்கள் நடந்து கொண்ட விதத்தை ஏற்றுக் கொள்ள முடியுமா ? திருமா முக்கியமான தலைவர் ! ஆனால் ஒரு இடத்தில் அவரது தொண்டரகள் தவறாக நடந்துகொள்கிறார்கள், அதற்கு அவர் தான் பொறுப்பு. அவர் காரில் தான் இருக்கிறார். திருமாவளவன் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறு இதைச் சொன்னால். நம்மை நான்கு பேர் வந்து திட்டுகிறார்கள். எப்படி எங்களைச் சொல்லலாம் என்று... உண்மையைத்தான் சொன்னோம் ? பொது இடத்தில் நீங்கள் அடிக்கலாமா? அது எவ்வளவு பெரிய தவறு?" என கேள்வி எழுப்பினார்.
மேலும், "காவல்துறை ஏன் திருமாவளவன் அவர்களின் கட்சி தொண்டர்கள் செய்த தவறுக்கு முட்டுக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. திருமாவளவனின் தவறு என்று சொல்லவில்லை. அவர் காரில் இருந்தார், அவர் கட்டுப்படுத்தி இருக்க வேண்டும். அடிக்கிறார்கள், வண்டியை உடைக்கிறார்கள், கெட்ட வார்த்தை வசை பாடுகிறார்கள். அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதியாமல் இருக்கிறார்கள்" என்றார்.
தொடர்ந்து தவெக - பாஜக கூட்டணி என்று திருமாவளவன் கூறுகிறாரே என்ற கேள்விக்கு, "திருமாவளவன் எதற்கு பதறுகிறார் என்று தெரியவில்லை...? ஏன் ஆதவ் அர்ஜுனாவை கட்சியை விட்டு அனுப்பினார்கள்? எதற்காக அவர் உடன் இன்னும் நட்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்?. திருமாவளவன் பேச்சை பார்க்கும்போது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டில் ஆடுவது போல் உள்ளது திருமாவளவன் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும். திருமாவளவன் அண்ணன் அவரது கட்சி வாக்கு வேற எங்கேயோ போகுது என்று நினைத்துக் கொண்டு அவர் பாஜகவை திட்டிக் கொண்டிருக்கிறார்" என்றார்.
தொடர்ந்து ஸ்டாலினின் கோவை வருகை குறித்து பேசிய அவர், "இன்றைக்கு கோயம்புத்தூருக்கு ஸ்டாலின் ஐயா வருகிறார், அதற்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது. எதற்கு குழந்தைகளுக்கு அரை நாள் விடுமுறை?. பள்ளி விடுமுறை விட்டால்தான் நமக்கு தெரியும், முதலமைச்சரும் வருகிறார் என்று... இந்த ட்ராமாவை தமிழக முழுவதும் செய்கிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்றைக்கு கல்லூரிக்குள் நுழைந்து, பள்ளிக்கூடத்துக்கு நுழைந்து இதே டிராமாவை அங்கே செய்கிறார்கள். ஆள் சேர்க்கும் முகாமாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் செயல்படுகிறது. இன்றைக்கு கோயம்புத்தூருக்கு முதலமைச்சர் வருவதற்கு அரை நாள் விடுமுறைவிட்டது கோயம்புத்தூர் மக்களுக்கு பிடிக்கவில்லை. அரசியல் லாபத்திற்காக பள்ளிக்கூடங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்" என்றார்.
கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு வைக்கப்பட்டுள்ள ஜி.டி. நாயுடு பெயர் சர்ச்சை குறித்த கேள்விக்கு, "ஜி.டி. நாயுடு ஜாதி எல்லாம் தாண்டி பொது தலைவர், அந்த பாலத்துக்கு பெயர் சூட்ட சரியான நபர். ஜிடி நாயுடு அவர்கள் பெயர் வைத்ததற்கு நாங்கள் மனதார வரவேற்கிறோம். நாங்கள் அவரை ஒரு ஜாதிக்குள் அடைக்கவில்லை
நீங்கள் போட்டிருக்கும் ஒரு சாம்பிள் பட்டியலில் கருணாநிதி பெயரை வைக்கிறீர்கள், ஏன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பெயர் இல்லை? இந்த GO உங்கள் தலைவரை promte பண்ணுவதற்காக வைத்துள்ளீர்கள். பட்டியல் சமுதாயத்தில் பிறந்தவர்கள், பெரிய தலைவர்கள் ஆனவர்கள் பெயர்கள் இல்லை. இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா யார் பெயரும் இல்லை. முத்துராமலிங்க தேவர் அவர் இன்னும் ஜாதி தலைவராக பார்த்துக் கொண்டிருக்கிறார்களா தமிழக அரசு?.
இவர்கள் இந்த மாதிரி செய்தார்கள் என்றால் முக்கியமான தலைவர்கள் ஜாதி வட்டத்துக்குள் அடைக்கிறார்கள். இந்த GO திரும்பப் பெற வேண்டும். எம்ஜிஆர் அவர்கள் பெயரை வைக்கக்கூடாது என்று அரசாணை சொல்கிறது. இதைவிட இன்னும் கொடுமை உள்ளது, கருணாநிதி பெயர் உள்ளது. ஏன் எம்ஜிஆர் பெயர் இல்லை ?" என கேள்வி எழுப்பினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ