டாஸ்மாக் ஊழல்: 'ஸ்டாலினும் கெஜ்ரிவால் போல் கைதாவார்' பேசிய உடன் அண்ணாமலை கைது

Tamil Nadu News: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 17, 2025, 11:44 AM IST
  • ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டை எதிர்த்து போராட்டம்
  • பல்வேறு பாஜக தலைவர்கள் வீட்டு சிறையில் அடைப்பு
  • தேதி அறிவிக்காமல் போராட்டம் நடத்தினால் என்ன செய்வீர்கள் - அண்ணாமலை
டாஸ்மாக் ஊழல்: 'ஸ்டாலினும் கெஜ்ரிவால் போல் கைதாவார்' பேசிய உடன் அண்ணாமலை கைது

Tamil Nadu News: மதுபான கொள்முதலில் ரூ.1000 கோடிக்கு மேல் டாஸ்மாக்கில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசை கண்டித்து சென்னையில் இன்று (மார்ச் 17) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஒரு பெரிய முற்றுகை போராட்டத்தை தமிழக பாஜக சார்பில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu News: தமிழிசை சிறைபிடிப்பு

இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள வீட்டில் இருந்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புறப்பட்டார். தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிளம்பும் பாஜக நிர்வாகிகளை போலீசார் தடுத்து கைது செய்து வருகின்றனர். முன்னாள் ஆளுநரும், பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.

Tamil Nadu News: அண்ணாமலை கைது

அதே வேளையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கைது செய்வதற்காக அடையாறு மாவட்ட காவல் துணை ஆணையர் பொன் கார்த்தி குமார் தலைமையில் அக்கரை செக் போஸ்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போது கானத்தூரில் இருந்து புறப்பட்ட நிலையில், அக்கரை செக் போஸ்டில் போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். 

மேலும் படிக்க | லாபத்தில் திமுகவினர் தொழில்கள்; நஷ்டத்தில் திமுக அரசு - அர்ஜுன் சம்பத் அதிரடி

Tamil Nadu News: வீட்டு சிறையில் பாஜக முக்கிய தலைவர்கள் 

இந்நிலையில், கைதிற்கு முன்னதாக அண்ணாமலை அவரது அதிகாரப்பூர்வ X பக்கத்தில்,"திமுக அரசின் ரூ.1,000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து, பாஜக சார்பில் இன்று (மார்ச் 17) சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகைப் போராட்டம் அறிவித்திருந்தோம். தொடைநடுங்கி திமுக அரசு, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் ஆளுநருமான, அக்கா தமிழிசை மற்றும் மாநிலச் செயலாளர் சகோதரர் வினோஜ் பி.செல்வம் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என, வீட்டுச் சிறையில் வைத்திருக்கிறது.

பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பசைபோட்டு ஒட்டியது போல இருக்கும் ஆட்களைக் கொண்டு, கீழ்மட்டத்தில் இருக்கும் அதிகாரிகளை உங்கள் ஏவலுக்குப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள். ஜனநாயக ரீதியாகப் போராட்டம் அறிவித்து, முற்றுகை தேதியை முன்னரே அறிவித்ததால்தானே, உங்களால் இதுபோன்ற கோழைத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபட முடிகிறது? தேதியே அறிவிக்காமல், திடீரென்று ஓருநாள், நாங்கள் போராட்டத்தை முன்னெடுத்தால் உங்களால் என்ன செய்ய முடியும்?" என பதிவிட்டுள்ளார்.

Tamil Nadu News: தடுத்து நிறுத்தப்பட்ட கார்த்தியாயினி

அதேபோல், வேலூர் கிருஷ்ணாநகரில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினியும் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். சென்னையில் இன்று டாஸ்மாக் முற்றுகை போராட்டம் நடத்த செல்ல இருந்த கார்த்தியாயினியை வேலூர் காவல்துறையினர் வீட்டு காவலில் வைத்தனர். இவர் சென்னையில் போராட்டத்திற்காக செல்ல இருந்த வேலூர் மாவட்டத் தலைவர் தசரதன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பாஜக மாநில பொதுசெயலாளர் கார்த்தியாயினி கூறுகையில்,"இது ஜனநாயக படுகொலை. அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்தது. இதனை கண்டித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் சென்னையில் இன்று நடக்க இருந்தது. இதில் கலந்துகொள்ள செல்ல இருந்த என்னை தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்துள்ளனர்" என்று கூறினார்.

மேலும் படிக்க | 'பட்ஜெட்டும் ஹிட்... தமிழும் ஹிட்...' லோகோவில் 'ரூ' போட்டது ஏன்? ஸ்டாலின் விளக்கம்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News