)
திருநெல்வேலி அபிசேஷகப்பட்டி பகுதியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைகழகத்தில் இன்று (ஆகஸ்ட் 13) 32 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி, துணை வேந்தர் சந்திரசேகர், உயர் அதிகாரிகள் மற்றும் பேராசியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவியிடன் மாணவ மாணவிகள் பட்டம் வாங்கி சென்றனர். ஆனால் ஜீன் ஜோசப் என்ற மாணவி மட்டும் துணை வேந்தர் சந்திரசேகரிடம் பட்டத்தை பெற்றுக்கொண்டு சென்றார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அருகில் வந்து நிற்கும்படி கோரிக்கை விடுத்தும், அவரின் அழைப்பை மாணவி ஜீன் ஜோசப் கண்டுகொள்ளவில்லை. இச்சம்பவம் பல்கலைகழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அளுநரிடம் பட்டம் வாங்க மறுத்தது குறித்து பேசிய மாணவி ஜீன் ஜோசப், நான் திராவிட சிந்தாந்த்தை பின்பற்றுபவள். தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் ஒன்று செய்யாத ஆளுநரிடம் நான் ஏன் பாட்டம் வாங்க வேண்டும் எனக் கூறினார். மாணவி ஜீன் ஜோசப்பின் கணவர் நாகர்கோவில் மாநகர துணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை கண்டனம்
இந்த நிலையில், மாணவி ஜீன் ஜோசப்பின் இந்த செயலுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது திமுகவின் கீழ்த்தரமான அரசியல் என கூறி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், நாகர்கோவில் மாநகர திமுக துணைச்செயலாளர் திரு. ராஜன் என்ற நபரின் மனைவி, திருமதி. ஜீன் ஜோசப் என்பவர், ஆளுநர் கையால் பட்டம் பெற மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். காலகாலமாக, கட்சியில் பெயர் வாங்க, திமுகவினர் அரங்கேற்றி வரும் தரங்கெட்ட நாடகங்களுக்கு, கல்வி நிலையங்களையும் பயன்படுத்தி வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திமுகவின் கீழ்த்தரமான அரசியலை எல்லாம், கல்வி நிலையங்களில் வைத்துக் கொள்ளக் கூடாது என, தனது கட்சியினருக்கு, முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின்
அறிவுறுத்த வேண்டும். திமுகவைப் பிடிக்காத மக்களே தமிழகத்தில் அதிகம். அவர்களும் இதே போன்று நடந்து கொண்டால், முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின், தனது முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வார்? என தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ