Amit Shah Chennai Visit: சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மறைந்த குமரி அனந்தனின் வீட்டுக்குச் சென்று அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், குமரி அனந்தனின் திருவுருப்புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
Annamalai News: குமரி அனந்தன் கொண்டாடப்பட வேண்டியவர்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,"குமரி அனந்தன் மூத்த தலைவர். நதிகள் இணைப்பு, நடை பயணம் என பல இயக்கங்கள் நடத்தியவர். ஐந்து முறை சட்டப்பேரவை உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். சிறந்த மனிதராக ஆவார். குமரி அனந்தன் வாழ்க்கை கொண்டாடப்பட வேண்டிய வாழ்க்கை. சித்தாந்தத்தை மறந்து அனைவரும் ஒன்றாக இணைதிருந்தார்கள்.
இன்றைய தினம், @BJP4Tamilnadu முன்னாள் மாநிலத் தலைவர், அக்கா திருமதி @DrTamilisai4BJP அவர்களின் இல்லத்துக்குச் சென்று, அவர்களின் அன்புத் தந்தையார், இலக்கியச் செல்வர், ஐயா திரு. குமரி அனந்தன் அவர்கள் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி வணங்கினோம்.
எளிமையான, நேர்மையான தலைவராக… pic.twitter.com/pS08BdkAz7
— K.Annamalai (@annamalai_k) April 10, 2025
Annamalai News: குமரி அனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?
தேசிய தலைவர் நட்டா இரங்கல் செய்தி கொடுத்தார். அதை இன்று நேரில் கொடுத்தோம். தமிழிசை சௌந்தரராஜனுக்கு கட்சி சார்பில் ஆறுதல் தெரிவித்தோம். அவரும் தைரியமாக இருக்கிறார். இரங்கல் செய்தி கொடுத்த அனைத்து கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறோம். நான், எல்.முருகன் உட்பட அனைவரும் நேற்று கட்சி பணியில் இருந்தோம். அதனால் நேற்று வர முடியவில்லை. ஊடகங்கள் மறைவு செய்தியை கொண்டு சென்றதற்கு நன்றி தெரிவிக்கிறோம்" என்றார்.
மேலும் படிக்க | மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்வாகும் அண்ணாமலை? அவரே சொன்ன பதில்!
Annamalai News: அமித்ஷா வருகை - அண்ணாமலை விளக்கம்
அமித்ஷா சென்னை வர உள்ளதை குறித்த கேள்விக்கு, "அமித்ஷா நிகழ்ச்சி குறித்து அதிகாரப்பூர்வமாக நாளை (ஏப். 11) தெரிவிக்கிறோம். மாநில நிர்வாகிகளை சந்திப்பது மட்டுமே தான் நிகழ்ச்சி. பாஜக தலைவர் மாற்றத்திற்கும், அவரது வருகைக்கும் சம்பந்தம் இல்லை, அமித்ஷா வருகைக்கும், பாஜக தலைவர் நிகழ்விற்கும் தொடர்பு இல்லை" என்றார்.
Annamalai News: ஆளுநருக்கு பின்னடைவு இல்லை
ஆளுநர் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, "உச்சநீதிமன்றம் தீர்ப்பு முக்கியமானது தான். ஆளுநர் எடுக்கும் முடிவுக்கு காலதாமதம் குறித்து தான் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது. தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். பத்து மசோதாக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என தெரிவித்துள்ளனர். பாஜகவை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஏற்கிறோம். மாநில அரசை ஆளுநர் கேள்விக் கேட்க கூடாது என கூறவில்லையே" என்றார்.
Annamalai News: பாமகவின் உட்கட்சி விவகாரம்
அன்புமணியை தலைவர் பொறுப்பில் இருந்து விடுவித்து, செயல் தலைவராக நியமிப்பதாகவும், தான் தலைவர் பொறுப்பை கவனித்துக்கொள்வதாகவும் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று காலை பரபரப்பாக அறிவித்தார். இதுகுறித்த கேள்விக்கு அண்ணாமலை,"பாமக பொறுத்தவரை அது உட்கட்சி விவகாரம். நாங்கள் பேசக்கூடாது" என்றார்.
Annamalai News: தலைவர் மாற்றம் இருக்குமா?
திருமாவளவன் திமுக கூட்டணியில் சந்தோஷமாக இருக்கிறாரா என்று யோசிக்க வேண்டும் என்று கூறிய அண்ணாமலை, பட்டியலின மக்கள் குறித்து பிரச்னை தீர்க்கப்பட்டதா என யோசிக்க வேண்டும் என்றார். மேலும், பாஜக மாநில தலைவர் மாற்றமா இருக்குமா என்ற கேள்விக்கு நாளை விரிவாக பேசுவோம் என்றார்.
Annamalai News: பரபரப்பாகும் அரசியல் களம்
2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. திமுக கூட்டணி பலமாக தென்படும் வேளையில், அதற்கு எதிராக பலமாக கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் கடுமையாக முயற்சித்து வருகிறது எனலாம். நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை பெரும்பாலும் தனியே நிக்கவே வாய்ப்பிருக்கிறது.
அப்படியிருக்க, தற்போது அதிமுகவும் பாஜகவும் கூட்டணியில் இல்லாததால் தேர்தல் களம் பலமுனை போட்டியாக அமையும் வாய்ப்புள்ளது. எனவே, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணையும்பட்சத்தில் அது திமுக கூட்டணிக்கு பலமான ஒன்றாக இருக்கும் என கருதப்படுகிறது. பலமுனை போட்டி திமுகவுக்கு பெரியளவில் சாதகமாக அமைந்துவிடும் என்றும் அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
Amit Shah Chennai Visit: நாளை வருகிறார் அமித் ஷா
அந்த வகையில், தற்போது அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுக்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசியது, அதிமுக பாஜக உடன் கூட்டணி வைப்பதற்கு தயாராகிவிட்டது என்பதை உணர்த்தியது.
அதேவேளையில், தமிழக பாஜக மாநில தலைவர் மாற்றம், அமித்ஷா வருகை ஆகியவை தமிழக அரசியலில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமித்ஷா இன்றிரவு சென்னைக்கு வருகை தருகிறார். நாளை காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ள அவர், பல்வேறு தரப்பினரையும் சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | சென்னை வரும் அமித்ஷா முக்கிய திட்டங்கள் என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









