கோவை விமான நிலையத்தில் இன்று (அக்டோபர் 06) பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,
கரூர் சம்பவம் தொடர்பாக நீதி அரசர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது. விசாரணை நடக்கும் போது நீதி அரசராக இருந்தால் கூட கருத்துகளை சொல்வது ஏற்புடையது அல்ல.
விஜய்யை குற்றவாளியாக மாற்ற முடியாது
கரூர் விவகாரத்தில் விஜய் மீது வழக்கு தொடர்ந்தால் நிற்காது. அல்லு அர்ஜுனுடைய வழக்கில் ஹைதராபாத்தில் இதேதான் நடந்தது. அதேதான் இங்கும் நடக்கும். விஜய்யை குற்றவாளியாக மாற்ற முடியாது. அரசியல் ஆசைக்கு வேண்டுமானால் ஓரிரு நாள் கைது செய்யலாம். தமிழக வெற்றிக் கழகம் மீது தவறு உள்ளதா என்றால் ஒருசில தவறுகள் உள்ளது. அதற்காக விஜய்யை கைது செய்ய முடியாது.
தவெகவை ஆளுங்கட்சி நசுக்கப் பார்க்கிறது. தவெகவை காப்பாற்ற வேண்டிய கடமை பாஜகவுக்கு இல்லை. இதேபோல் திருமாவளவன் அவர்களுக்கு நடந்து இருந்தாலும் இதையே தான் சொல்வேன். தவெக விவகாரத்தில் நாங்கள் ஆதரவான கருத்து சொல்கிறோம் அடைக்கலம் கொடுக்கவில்லை. கரூர் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கரூர் விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி) காலம் தாழ்த்தாமல் விசாரிக்க வேண்டும். யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் எஸ்ஐடி அறிக்கை வரட்டும், பிறகு சிபிஐ விசாரணை தேவையா இல்லையா என பார்க்கலாம் என்றார்.
எங்களின் முதல் எதிரி திமுக தான்
தொடர்ந்து பேசிய அவர், என் பெயரை சொல்லி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் தொடர்பாக நான் புகார் அளித்து உள்ளேன். பாதிக்கப்பட்டவர்களிடம் என் பெயரை பயன்படுத்தியதால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மத்திய அரசு நிதி ஒதுக்கி இருந்தாலும் கோவையில் 10 கிலோ மீட்டர் மேம்பாலத்தை முதலமைச்சர் திறப்பது மகிழ்ச்சி தான்.
நாட்டில் மக்கள் எங்கு பாதிப்பபட்டாலும் பாஜக குழு செல்லும் உரிமை உள்ளது. இதற்கு முதலமைச்சர் ஏன் பயப்படுகிறார். அனைத்து கட்சி பிரதிநிதிகளுக்கும் மக்களை சந்திக்க உரிமை உள்ளது. எங்கள் மாநில தலைவர் யாத்திரையில் கூட பகுதிகளுக்கு செல்ல குழப்பம் உள்ளது. இதற்கு முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்வு காண வேண்டும். எங்களை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக வை வீழ்த்த வேண்டும். எங்களுக்கு முதன்மை எதிரி திமுக. பா.ஜ.க விற்குள் எந்த குழப்பமும் இல்லை என தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய குட் நியூஸ்! தீபாவளி போனஸ் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









