)
Sellur Raju: செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதுரையில் 10 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்" சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக மதுரை காளவாசல் பகுதியில் உள்ள மேற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்திற்கான பிரச்சார வாகனம் மற்றும் நிழற்குடைகளை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து இந்த நிகழ்வில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 1ஆம் தேதி மதுரை வருகிறார் மாலை 4 மணியில் இருந்து சுற்றுப்பயணம் செய்கிறார். எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் போது கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் கொண்ட குழு, மேள தாளங்கள் முழங்க வரவேற்க உள்ளார்கள். எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் மூன்றாம் தேதி மாலை 5 மணி அளவில் மதுரை மேற்கு தொகுதியில் பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.
மதுரை மாவட்டத்திற்கு 8000 கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. மதுரை மக்கள் எடப்பாடி பழனிசாமியை இன்முகத்தோடு வரவேற்பார்கள். மதுரை மக்களின் குடிநீர் பிரச்சனையை சரிசெய்து இரண்டு தலைமுறை பயன்படும் அளவிற்கு தொலைநோக்கு பார்வையில் தண்ணீர் திட்டம் தந்தவர் எடப்பாடி பழனிசாமி. மதுரையில் உயர்மட்ட பாலங்கள், பறக்கும் பாலங்கள், வைகை ஆற்றில் ஐந்து தடுப்பணை கட்டியது, தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பும் வகையில் சீரமைப்பு செய்தது, அதிமுக ஆட்சியில்தான்.
மதுரை மாநகராட்சி ஊழல் நிறைந்த மாநகராட்சி, உலகமே காரி துப்புகிறது. மதுரை கோவில் மாநகரம், இன்றைக்கு குப்பை மாநகரமாக மாற்றிய பெருமை மதுரை மாநகராட்சிக்கு சேரும். வரலாறு காணாத வகையில் மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டல தலைவர்கள் வரி முறைகேட்டால் ராஜினாமா செய்துள்ளனர். திமுகவிற்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷம் இல்லை. ஊழல் மேயரை வைத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றுவது எவ்வளவு பொருத்தமாக இருக்கும். திருடனை வைத்துக் கொண்டே திருட்டை ஒழிப்பது போல இருக்கிறது.
செப்டம்பர் இரண்டாம் தேதி ஜிஆர்டி ஓட்டலில் மதுரையில் உள்ள உணவு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், மதுரையில் உள்ள வட மாநில மக்கள், தொழிலதிபர்கள், வியாபாரிகள், சிறு வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோரை இபிஎஸ் சந்திக்க உள்ளார்" என்றார்.
தொடர்ந்து, பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, 2026 சட்டமன்ற பொது தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை உயிரை கொடுத்தாவது முதலமைச்சர் அரியணையில் ஏற்றுவோம் என பேசியது குறித்து பதில் அளித்த செல்லூர் ராஜு, "அண்ணாமலை உயிரையெல்லாம் கொடுக்க வேண்டாம், அவரது கட்சிக்காரர்களை தூண்டிவிட்டால் போதும். அன்பு சகோதரர் அண்ணாமலை அவரது கட்சிக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்தால் போதுமானது. அதிமுக ஆட்சி மலரப்போகிறது" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ