நீக்கப்படும் அண்ணாமலை...? புதிய பாஜக மாநில தலைவர் யார்...? முந்தும் முக்கிய தலைகள்!

Tamil Nadu BJP News: பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Apr 1, 2025, 01:51 PM IST
  • இபிஎஸ் சமீபத்தில் டெல்லி சென்றிருந்தார்.
  • அங்கு அமித் ஷா உடன் சந்திப்பு நடத்தினார்.
  • இதையடுத்து அதிமுக - பாஜக கூட்டணி பேச்சுகள் எழுந்தன.
நீக்கப்படும் அண்ணாமலை...? புதிய பாஜக மாநில தலைவர் யார்...? முந்தும் முக்கிய தலைகள்!

Tamil Nadu BJP News: பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்ணாமலைக்கு பதில் புதிய மாநில தலைவரை நியமிக்க பாஜக மேலிடம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Add Zee News as a Preferred Source

Tamil Nadu BJP News: புதிய பாஜக தலைவர் யார்?

புதிய மாநில தலைவருக்கான போட்டியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலை பெறுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பெயர்களும் தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக - பாஜக கூட்டணியை உறுதிசெய்யும் வகையிலேயே தமிழக பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம் செய்யப்படுவதாக தகவல் தெரியவந்துள்ளது.

Tamil Nadu BJP News: அமித் ஷா உடன் சந்திப்பு

சமீபத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றிருந்தார். அப்போது அவர் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித் ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி. சண்முகம், சந்திரசேகர், அதிமுக நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, கே.பி.முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர். அமித் ஷாவை சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி தனியாகவும் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

Tamil Nadu BJP News: உறுதியாகும் அதிமுக - பாஜக கூட்டணி?

அந்த வகையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் அதிமுக வருவதற்கான அறிகுறிகள் அதிகமாக தென்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அமித் ஷா உடனான சந்திப்புக்கு பாஜக - அதிமுக கூட்டணி அமைய இருக்கிறதா என எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளரிடம் கேட்டதற்கு, தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றும் கூட்டணி விஷயத்தில் எந்த கட்சியாவது நிலையாக இருந்திருக்கிறதா என்றும் பேசியிருந்தார். இதன்மூலமும் பாஜக - அதிமுக கூட்டணி ஏறத்தாழ உறுதியாகவிட்டதாக கூறப்பட்டது.

Tamil Nadu BJP News: இபிஎஸ் vs அண்ணாமலை உரசல்?

அதேநேரத்தில், இதே கேள்வியை அண்ணாமலையிடம் கேட்டபோது, பாஜக தேசிய தலைமை எடுக்கும் முடிவு தமிழகத்தின் வளர்ச்சிக்கும் தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருக்கும் என பேசியிருந்தார். மேலும், கூட்டணியில் இருந்து பிரிந்து வந்த பின்னர் அதிமுக குறித்து தான் கூறிய கருத்துகளில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அண்ணாமலை பேசியிருந்தார். இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி - அண்ணாமலை இடையேயான உரசல் நீடிப்பதையும் பார்க்க முடிந்தது.

Tamil Nadu BJP News: ஏன் நயினார் நாகேந்திரன்?

எனவே, அதிமுக உடன் கூட்டணியை உறுதிசெய்வதற்கு, பாஜக அதன் மாநில தலைவரை மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியிருக்கலாம். இதனால், அண்ணாமலைக்கு பதில் அதிமுகவுக்கு இணக்கமான தலைவர் ஒருவரை நியமிக்க பாஜக தேசிய தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. எனவேதான், நயினார் நாகேந்திரன் தலைவர் ரேஸில் முன்னிலையில் இருக்கிறார் என கூறப்படுகிறது.

Tamil Nadu BJP News: 2026 தேர்தலே டார்கெட்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தற்போது பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உடன் ஓபிஎஸ் தரப்பும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேமுகவில் இந்த கூட்டணியில் சேர்ந்தால் ஆளும் திமுகவுக்கு எதிராக பலமான கூட்டணியை அமைக்கலாம் என அதிமுக - பாஜக திட்டமிடுவதாக கூறப்படுகிறது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க அதிமுகவுக்குள்ளேயே சில பிரச்னைகள் எழுந்திருப்பதாக கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாஜக உடன் அதிமுக கூட்டணியா...? சூசகமாக பேசிய இபிஎஸ் - சொன்னது என்ன?

மேலும் படிக்க | ED-யை பார்த்து பயந்து தான் பாஜகவுடன் கூட்டணியா? ஓசூரில் புகழேந்தி பேட்டி!

மேலும் படிக்க | அதிமுக உடன் கூட்டணியா... அண்ணாமலை கூறிய பதில் என்ன தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News