பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இன்று (நவம்பர் 13) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, விவசாயத்திற்கு இந்நாட்டில் தேவையான முன்னுரிமை வழங்கப்படவில்லை. நாட்டு மாடு வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும், அதற்கான மானியமும் அதிகரிக்கப்பட வேண்டும். வரும் 19ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகிறார். விவசாயத்திற்கு மூன்று மணி நேரம் ஒதுக்கி வருகிறார்.
டெல்லி கார் வெடிப்பு சம்பவம்
டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியூட்டுகிறது. இது ஆபத்தான நிகழ்வாகும் என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் பாதுகாப்பு மீதான ஆபத்து அதிகம் எனவும், காரணம் பொருளாதார நிலைமை என்றும் கூறினார். காவல்துறை உயிரை பணயம் வைத்து பணியாற்றுகிறது. அதற்கு அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார்.
இன்னும் பல தொழில்கள் தொடங்குவேன்
சமூக விரோதமும், சினிமா வழி வன்முறையும் அதிகரித்து வருவதாகவும், தண்டனை நடைமுறைகள் தாமதமாக இருப்பதும் கவலைக்குரியது என்றும் அவர் கூறினார். திமுக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக காவல்துறையை பலவீனப்படுத்தியுள்ளதாகவும் விமர்சித்தார். தனது தொழில்களைப் பற்றி பேசிய அவர், "என் தொழிலும் நியாயமாகச் செய்கிறேன். ஒரு ரூபாய் கூட கட்சியிலிருந்து வாங்க மாட்டேன். மரியாதையோடு வாழ நினைக்கிறேன். எனது மனைவி வேலை செய்கிறார். இன்னும் பல தொழில்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளேன்," என்றார்.
விவசாயிகள் மீது வழக்கு
மேலும், சுல்தான்பேட்டையில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும், பி.எம்.கிஸான் திட்டத்தில் தமிழ்நாட்டில் விவசாயிகள் சேர்க்கை குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பீகார் மாநில அரசியல் நிலை, தேர்தல் வாய்ப்புகள் மற்றும் வரவிருக்கும் புதிய கட்சிகள் பற்றியும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும் படிக்க: கள்ளக்காதலுக்காக பெண்ணின் கணவரை வீடு புகுந்து வெட்டிய காதலன்.. நடந்தது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









