Aavin : நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு உட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் விற்பனை நாளொன்றுக்கு சுமார் 69,336 லிட்டரும் மற்றும் பால் பொருட்களின் விற்பனை மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் அளவிலும் விற்பனை செய்து வருகிறோம்.
மேலும் முகவர்கள் சுமார் 544 நபர்களும், மொத்த விற்பனையாளர்கள் 51 நபர்களும் மற்றும் பாலக முகவர்கள் 61 நபர்களும் இவ்வொன்றியத்தில் செயல்பட்டு வருவதோடு அனைத்துவித முகவர்கள் மூலம் ஆவின் பால், நெய், வெண்ணெய், ஐஸ்கிரிம், பாதாம் பவுடர், மில்க் பிஸ்கட், குக்கீஸ் பிஸ்கட், மில்க்ஷேக், மாவின், பனீர், பால் பவுடர், சாக்லேட், பிளேவர்ட் மில்க், தயிர், மோர் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட பொருட்களை விற்பனை செய்து வருகிறோம்.
மேலும், தமிழ்நாட்டில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அதிகம் உண்ணும் பொருட்களில் ஒன்றாக ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தரமாக உற்பத்தி செய்து வருவதாலும் மற்றும் தனியார் நிறுவனங்களை ஒப்பிடுகையில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாலும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மேற்படி பொருட்களை இவ்வொன்றிய பாலகங்கள் மற்றும் அனைத்துவித முகவர்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். அவ்வாறு விற்பனை செய்யும் முகவர்களுக்கு பொருட்கள் வாரியாக கமிஷன் தொகை இவ்வொன்றியத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் பெரும்பாலான முகவர்கள் அதிகளவில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து பயனடைவதோடு பொருளாதார ரீதியிலும் முகவர்கள் முன்னேறி வருகின்றனர். அவ்வாறு இருக்கும் சூழ்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு முகவர்கள் அதிகம் தேவைப்படுகிறது. எனவே ஆவின் விற்பனை நிலையம் அமைத்து செயல்படுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்திற்கு நேரில் வருகைதந்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தாலுக்கா வாரியாக ஆவின் பால்பொருட்களின் மொத்த விற்பனையாளர்கள் இவ்வொன்றியத்திற்கு தேவைப்படுகிறது. எனவே தாலுக்கா வாரியாக ஆவின் மொத்த விற்பனையாளர்களாக செயல்பட விருப்பம் உள்ள நபர்களும் தஞ்சாவூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தை நேரில் அணுகி பயன்பெறுமாறும், மேலும் 8015304755 / 8015304766 / 8807983824 ஆகிய எண்களை தொடர்புகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்! ரூ.15 லட்சம் எளிய கடன், 15% மானியம் - முழு விவரம்
மேலும் படிக்க | ரேஷன் கார்டு : மாதந்தோறும் பொருள் வாங்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









