New Ration Card : புதிய ரேஷன் கார்டு வாங்க வேண்டும் என நினைத்துக் கொண்டு பல நாட்களாக விண்ணப்பிக்காமல் இருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ். நீங்கள் உங்களுக்கான புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க இது சரியான நேரம். இந்த வாய்ப்பை நழுவ விட்டுவிடாதீர்கள். ஏன் தெரியுமா?. இப்போது அரசிடம் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு சீக்கிரம் ஒப்புதல் கிடைத்துவிடும். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அது என்னவென்றால், தமிழ்நாடு முழுவதும் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு கொடுக்கப்படும் மனுக்கள் மீது 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.
அதனால், புதிய ரேஷன் கார்டு (New Ration Card) கேட்டு விண்ணப்பிப்பவர்களும் இந்த நேரத்தில் தங்களின் விண்ணப்பங்களை அரசுக்கு அனுப்பினால் சீக்கிரம் ஒப்புதல் கிடைத்துவிடும். அப்படி கிடைத்துவிட்டால் உங்கள் கைகளுக்கு சீக்கிரம் புதிய ரேஷன் கார்டு கிடைத்துவிடும். அதனை வைத்து அதே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொண்டு, உரிய தகுதிகள் இருப்பின், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கும் விண்ணப்பித்துவிடலாம். எனவே, இந்த பொன்னான வாய்ப்பை தவிறவிட்டு விடாதீர்கள்.
டிசம்பர் மாதங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகள் மற்றும் பிரச்சாரங்கள் சூடுபிடித்துவிடும். அதனால், ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணப்பிப்பவர்களுக்கு புதிய அரசு அமைந்த பிறகே கிடைக்க வாய்ப்புள்ளது. இதற்காக நீங்கள் சில மாதங்கள் வரை கட்டாயம் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவீர்கள்.
ஆனால், இப்போது விண்ணப்பித்தால் உங்களுக்கான புதிய ரேஷன் கார்டு இந்த ஆண்டு இறுதியிலேயே கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்து கொள்ள முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே புதிய ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணபிக்கவும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, வீட்டு வரி ரசீது, கேஸ் இணைப்பு ரசீது, மின் இணைப்பு ரசீது ஆகியவை இருந்தால் வீட்டில் இருந்தே விண்ணப்பித்துவிடலாம்.
அதன்பிறகு உங்களுக்கு கொடுக்கப்படும் பதிவு எண் மூலம் ரேஷன் கார்டு விண்ணப்ப நிலையை ஆன்லைனில் நீங்கள் அறிந்து கொள்ளலாம். உடனடியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்துவிட்டு, உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு நேரடியாக சென்று, சீக்கிரம் ரேஷன் கார்டு வேண்டும் என்பதற்கான காரணத்தை கூறுங்கள். அங்கிருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவலை தெரிவிப்பார்கள். ஒருவேளை சீக்கிரம் கிடைத்தால் உங்களுக்கு மகிழ்ச்சி தானே... முயற்சி செய்து பார்க்கவும். அடுத்தாண்டு தேர்தல் வர இருப்பதால் மக்களின் மனுக்கள் மீது சீக்கிரம் நடவடிக்கைகள் எடுக்கப்பட இருக்கிறது. அதில் உங்களுக்கான புதிய ரேஷன் கார்டும் கிடைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசின் முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் : தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









