)
Tamilnadu jobs : பூட்டான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing - யில் தேர்ச்சி பெற்று 23 முதல் 45 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். மேற்படி, 2 முதல் 5 வருட பணி அனுபவமுள்ள பணியாளர்களுக்கு ரூ.65,000/-, தியமாகவும் 6 முதல் 10 வருட பணி அனுபவமுள்ளவர்களுக்கு 73,000/- ஊதியமாகவும், 10 வருடத்திற்கு மேல் பணி அனுபவமுள்ளவர்களுக்கு ரூ.86,000/- ஊதியமாகவும் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும வெளிநாட்டு பணிக்காலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வேலைகளுக்கான வலைதளமான www.omcmanpower.tn.gov.in - ல் கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் ஊதியம் மற்றும் பணி பற்றிய விவரங்களை www.omcmanpower.tn.gov.in மூலமாகவும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம் (6379179200) (044-22502267). மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற linkல் தங்கள் சுய விவரங்களை பூர்த்தி செய்தும் கல்விச்சான்றிதழ் பாஸ்போட் (Passport) அனுபவச்சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற இந்நிறுவனத்தின் மின்னஞ்சலுக்கு 18/08/2025 க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரிடையாக பதிவு செய்து கொண்டு இந்நிறுவனத்தின் மூலம் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். படிப்பு மற்றும் பணிவிவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப்பணிக்கு தேர்ச்சிபெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ.35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் இப்படி தெரிவித்துள்ளது.
பூடானில் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பு
பணியிடம்: பூடான் சுகாதார அமைச்சக மருத்துவமனைகள்
பணி: செவிலியர் (ஆண்/பெண்)
பணி அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள்.
கல்வித் தகுதி: B.Sc. Nursing முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 23 முதல் 45 வயது வரை.
சம்பள விவரம்:
2 முதல் 5 வருட அனுபவம்: ₹65,000
6 முதல் 10 வருட அனுபவம்: ₹73,000
10 வருடங்களுக்கு மேல் அனுபவம்: ₹86,000
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ளவர்கள் https://forms.gle/JS2b341tf2tcpJn56 என்ற இணைப்பில் தங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றை ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 18.08.2025-க்குள் அனுப்ப வேண்டும்.
வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் தகவல்களுக்கு www.omcmanpower.tn.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். தொலைபேசி எண்கள்: 6379179200, 044-22502267.
இந்த வேலைவாய்ப்புக்கு இடைத்தரகர்கள் யாரும் இல்லை. விண்ணப்பதாரர்கள் நேரடியாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களிடமிருந்து சேவை கட்டணமாக ₹35,400 வசூலிக்கப்படும்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் 2513 வேலைவாய்ப்புகள்
பணியிடங்கள்: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், பண்டகசாலைகள், நகர கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு கூட்டுறவு சங்கங்கள்.
காலிப்பணியிடங்கள்: 2513 (செயலர், உதவியாளர், இளநிலை உதவியாளர், எழுத்தர், மேற்பார்வையாளர்).
விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.08.2025.
தகுதி விவரம்:
கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்திருக்க வேண்டும். (ராணுவத்தில் பணிபுரிந்து, ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்).
கூட்டுறவு பயிற்சி: தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மேலாண்மை நிலையங்கள், சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் ஆகியவற்றில் உயர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 01.07.2025 அன்று 18 முதல் 32 வயது வரை. (SC, ST, BC, MBC, BCM உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை).
தேர்வு மற்றும் விண்ணப்ப விவரங்கள்:
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.
எழுத்துத் தேர்வு நாள்: 11.10.2025.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ₹500, ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு ₹250.
விண்ணப்பிக்கும் முறை: அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளங்கள் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணையதளங்களில் உள்ள அறிவிப்பைப் பார்க்கலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ