பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூர் பகுதியில் உள்ள அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் படிங்க: ரிதன்யாவின் மரணம் வெறும் தற்கொலை அல்ல.. திட்டமிட்ட படுகொலை.. சீமான்!
முன்னதாக காலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைதி பேரணியாக வந்து ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அஞ்சலி செலுத்தினார். இதனை அடுத்து இன்று மதியம் சுமார் 2 மணி அளவில் பொற்கொடி சாங் புதிய கட்சி பெயரை அறிவித்து கொடியையும் அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். பா ரஞ்சித் அவர்கள் குழுவாக வந்து ஆம்ஸ்ட்ராங் அவருடைய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்களை தூவி மவுன அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவருடைய நினைவிடத்திற்கு வரக்கூடிய கட்சித் தொண்டர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்பதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்களை வெளியிடுவார்களா அதுமட்டுமில்லாமல் சிபிசிஐடிக்கு மாற்றிய பின்பும் இதுவரை எந்த தகவலும் வெளியிடாமல் இருக்கின்றார்கள். தொடர்ந்து ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தீவிர விசாரணை நடைபெறுமா என்ற கேள்விகள் எழுப்பப்பட்டது.

இது குறித்து அரசியல் தலைவர்கள் பேசுகையில் தீவிர விசாரணை நடைபெறும் என்றும் இதற்கு முழுவதுமாக திமுக உதவி செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்ம்ஸ்ட்ராங் அவர்களுடைய சமாதியில் பூக்களை தூவி அவருக்கு மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து திறக்கப்பட்ட அவருடைய திருவுருவ சிலைக்கு கட்சி தொண்டர்கள் காலில் விழுந்து வணங்கிச் சென்றனர்.
மேலும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









