தமிழ்நாட்டில் அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி - நடிகர் எஸ்.வி.சேகர்!

அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Mar 1, 2025, 04:18 PM IST
  • சென்னையில் நடிகர் எஸ்.வி. சேகர் பேட்டி
  • அண்ணாமலை மீது கடும் சாடல்
தமிழ்நாட்டில் அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி - நடிகர் எஸ்.வி.சேகர்!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஓட்டலில் கிளினிக்கல்ஸ்  மருத்துவமனை சார்பில் நீரிழிவு நோயாளிகளுக்கான சிறப்பு சிகிச்சை விழிப்புணர்வு   சிறப்பு கிளப்பை நடிகர் எஸ்.வி.சேகர் திறந்து வைத்தார். பின்னர் நீரிழிவு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்த அதற்கான பிரத்யேக கால் சென்டர் என்னையும் நடிகர் எஸ்.வி.சேகர் அறிமுகம் செய்தார்.

Add Zee News as a Preferred Source

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் எஸ்.வி.சேகர்; தமிழ்நாட்டில் இருமொழி கொள்கை என்பதே சரி. தமிழ்நாட்டில் இந்தியை எப்படியாவது திணிக்க வேண்டும் என்பதற்காகவும், சமீபத்தில் வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா நாங்கள் இந்தியை திணிக்க மாட்டோம் என்று இந்தியில் தெரிவித்து விட்டு சென்றார்.

நாம் எந்த மாநிலத்திற்கு சென்றாலும் 3 மாதத்தில் அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள முடியும். ஆனால் பாஜக அரசு உடனடியாக இந்தியை கற்றுக் கொள் என்று கூறுவதால் நாளை ஒருவருக்கு ஜப்பானில் வேலை கிடைத்தால் இந்தி மொழியை வைத்துக் கொண்டு ஜப்பானில் என்ன செய்ய முடியும். 

மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று பாஜாக சொன்னாலும், ஒரு ஒரு மொழி படிக்கும் மாணவர்களுக்கு ஒரு ஒரு ஆசிரியர் நியமிக்க முடியுமா? மத்திய அரசை யார் ஆண்டாளும் இந்தியை எப்படியாவது கொண்டு வர வேண்டும், 'THINK GLOBAL ' ' ACT GLOBAL ' என்று சொல்லுவார்கள். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டுமே இருக்கிறது. 

இந்தி வேண்டும் என்று யார் கேட்டார்கள். இந்தியை இலவசமாக சொல்லி தருவதை யாரும் தடுக்க வில்லை. ஆனால் எல்லா கொள்கைகளையும் அரசியலாக மாற்றப்படும் போது தான் எதிர்ப்பு வருகிறது. அதை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நான் சொல்வதை நீங்கள் செய்யவில்லை என்று சொன்னால் நிதி தர மாட்டேன் என்று சொல்வது  நியாயமா? 

மேலும் படிங்க: ஒரு வீட்டுக்கு ரூ.3000 கொடுக்கும் தமிழ்நாடு அரசின் சூப்பரான மூன்று திட்டங்கள்

மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்க வாய்ப்பே இல்லை 

இன்னும் இந்த பாஜாக ஆட்சி 4 வருடம் நடக்கும். பின்னர் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தவறு செய்து விட்டோம் என்று புலம்புவார்கள். மூன்று முறை ஆட்சி செய்து விட்டார்கள். இதற்கு மேல் மத்திய ஆட்சியை பிடிப்பதற்கு பாஜாகவிற்கு வாய்ப்பே இல்லை. ஒரே நாடு, ஒரே கொள்கை, ஒரே தேர்தல், ஒரே ஓட்டு இதெல்லாம் நடக்காது. ஏனெனில் இந்தியா என்பது UNITY DIVERSITY எத்தனையோ மொழிகள், ஜாதிகள், மதங்கள் என எல்லாம் சேர்ந்தது. 

தர்மம் அனைவருக்கும் சமம். அதை விட்டு விட்டு பாஜாக சொல்வது தான் தர்மம் என்றால் அது அடவாடி. அது சரியாக வராது. மும்மொழிக் கொள்கையை சரியான முறையில் தமிழக முதல்வர் மிக கடுமையாக எதிர்த்து கொண்டிருக்கிறார். அவருக்கு நானும்,அனைவரும் உறுதுணையாக இருப்போம்.

நான் 1962ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை படிக்கும் போது முதன் முதலில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு காவல் துறையினருக்கு பயந்து ஒளிந்து கொண்டு வீட்டிற்கு வந்தேன். இந்தி எதிர்ப்பை மறக்கலாம் என்று பார்த்தால்,மறக்க கூடாது என்று தூண்டி விட்டுக் கொண்டே இருக்கிறது மத்திய அரசு. இதனால் பாஜாக விற்கு ஒரு ஓட்டும் விழாது,வர வேண்டிய ஓட்டுகளும் குறையும்.  மத்திய அரசின் பணியில் இருப்பவர்களின் குழந்தைகள் சிபிஎஸ்இ பள்ளியில் படித்து அவர்களுக்கு தேவைப்படுகின்ற இந்தி மொழியை கற்றுக் கொண்டு வருகிறார்கள் எனத் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் அண்ணாமலை இருக்கும் வரை திமுக-விற்கு தான் வெற்றி

வலிக்காத சவுக்கு கோயம்புத்தூரில் தான் கிடைக்கும். வலிக்கமால் அடித்து கொள்வது எப்படி, காலனி அணியாமல் நடப்பேன் என்று கூறிவிட்டு, தற்போது ஷூ போட்டுக் கொண்டு நடந்தால் எப்படி இதெல்லாம் பைத்தியக்காரன் செய்யும் வேலை. அண்ணாமலை இருக்கும் வரை என்றென்றும் தமிழ்நாட்டில் திமுக-வின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. இதில் எந்த பிரச்சனையும் இல்லை. 

திமுக தனியாக சென்று வாக்கு சேகரிக்க வேண்டாம். அண்ணாமலையை அனைத்து பகுதிகளில் அனுப்பி வைத்து பேச வைத்தால் திமுகவிற்கு வாக்கு கிடைத்து விட்டு வெற்றி பெற்று விடலாம். அந்த அளவுக்கு மிகச் சிறந்த உளறுவாயன் அண்ணாமலை. நல்ல பெயரை வைத்துக் கொண்டு இப்படி தமிழகத்திற்கு மோசம் செய்தால் எப்படி. 

தமிழக பாஜா தலைவராக இருக்கலாமா அண்ணாமலை இருக்கலாமா என்று அனைவரும் கேட்கிறார்கள். அண்ணாமலை அரசியலில் இருக்கலாமா என்று நான் கேட்கிறேன். எந்த நாகரிகமும் தெரியதாவர் அண்ணாமலை. வாயை திறந்தாலே பொய் தான் பேசி வருகிறார். சட்ட ரீதியாக என்ன இருக்கோ அதை சட்ட ரீதியாக செய்யலாம் என்றார்.

மேலும் படிங்க: அடேங்கப்பா.. ஒரு எலுமிச்சை 13 ஆயிரம் ரூபாய்-ஆ? காரணம் இதுதாங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News