சென்னையில் தனியார் கல்லூரி வகுப்பறையில் முன்னாள் பேராசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவள்ளூர் மாவட்டம் காரப்பாக்கம் எல்லையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிசாந்தி 5 வருடங்களுக்கு முன்பு அரும்பாக்கத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் உதவி விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். 


அவ்வபோது தன்னுடன் பணியாற்றிய நண்பர்களை பார்ப்பதற்காக தனியார் கல்லூரிக்கு வருவது வழக்கம். நேற்று மாலை கல்லூரிக்கு வந்தவர் தான் பணியாற்றிய தெலுங்கு பிரிவு வகுப்பறைக்கு சென்றுள்ளார். இன்று காலை தெலுங்கு பிரிவு துறைத் தலைவர் நட்ராஜ் வகுப்பறையை திறந்து பார்க்கும் போது ஹரி சாந்தி தூக்கில் தொங்கி இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. 


வகுப்பறைக்கு சென்ற மாணவிகள் பேராசிரியை ஹரிசாந்தி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அரும்பாக்கம் போலீசார் விரைந்து சென்று ஹரிசாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 


இந்தநிலையில், இந்த தற்கொலை சம்பவம் கல்லூரியில் பணியாற்றும் மற்ற பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.