)
மூன்றாவது நாளாக பாமக கட்சியின் மாவட்ட செயலாளர் கூட்டம் ஈசிஆர் சாலை கானத்தூர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை, தேனி, கோயம்பத்தூர், தென்காசி, நெல்லை மற்றும் தென் மாவட்டங்களைச் சார்ந்து நடைபெறுகின்றது. 30 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கின்றனர். கட்சியின் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுப்பிக்கப்பட்ட அடையாள அட்டை வழங்குதல், வருகிற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்தான ஆலோசனைகளை அன்புமணி ராமதாஸ் வழங்கினார். கடந்த இரண்டு நாட்களாக சோழிங்கநல்லூரில் நடைபெற்ற கூட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் சந்தித்து அன்புமணி ராமதாஸ் ஆலோசனைகளை வழங்கினார்.
அன்புமணி பேச்சு
தமிழக அரசுக்கு சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாது. சமூக நீதிக்கு PHD நாம் படித்துள்ளோம். நம்முடைய இனமான காவலர், சமூகநீதி போராளி. இன்று இந்தியாவில் சமூகநீதி போராளி என்றால் அது அய்யா தான். அவருடைய கொள்கையை கடைபிடித்து முன்னேறுவோம். பாட்டாளி மக்கள் கட்சி எதற்காக தொடங்கினோம். மற்றவர்கள் ஆட்சிக்கு வரவா துவங்கினோம். நாம் ஆட்சிக்கு வர தான் துவங்கினோம். தமிழ்நாட்டு முன்னேற்றம் தான் நம்முடைய இலக்கு. தமிழ்நாட்டில் 377 சமுதாயங்கள் இடஒதுக்கீட்டை அனுபவித்து கொண்டிருக்கிறது. இதில் யாருக்கு இடஒதுக்கீடு கிடைக்கிறது என்று யாருக்கு தெரியும். சாதிவரிய கணக்கெடுப்பு நடத்தினால் தான் தெரியும். 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி அங்கம் வகிக்கின்ற கூட்டணி ஆட்சிதான் நடக்கும்.
அதன் பிறகு அடுத்தக்கட்டத்தில் நம்ம ஆட்சி. ஆற்றில் தடுப்பணை கட்டுங்கள் என்றால் ஆற்றில் செல்லும் தண்ணீரை தடுத்து நிறுத்த மாட்டார்கள், ஏனென்றால் மணல் கொள்ளை அடிக்க முடியாது. இப்படி எல்லாம் ஆட்சி நடத்துவதா? என்னிடம் மட்டும் ஆட்சி இருந்தால் தமிழ்நாட்டில் தாமிரபரணி ஆற்றில் ஒவ்வொரு 10 கிலோ மீட்டருக்கும் தடுப்பணை, வைகை, காவேரி, பாலாறு, தென்பெண்ணை இப்படி ஒவ்வொரு பெரிய ஆற்றிலும் 10 கிலோ மீட்டருக்கு தடுப்பணை, அதன்பிறகு ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு 5 கிலோ மீட்டருக்கு தடுப்பணை கட்டப்படும். இப்படி எவ்வளவோ திட்டங்கள் இருக்கிறது. நமக்கு தெரிகிறது செயல்படுத்தும் இடத்தில் இல்லை, அவர்களுக்கு தெரியவில்லை செயல்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கிறார்கள்.
இந்த இடம் மாற வேண்டும் அதற்கு நீங்கள் எல்லாம் வேலை செய்யுங்கள் என நிர்வாகிகளிடையே பேசினார்.
தென்மாவட்டங்களில் பிரச்சனை என்றால் மருத்துவர் அய்யா அவர்கள் ஓடோடி வருவார். இப்ப இருக்கிற சின்ன குழப்பங்கள் எல்லாம் சரியாகி விடும். அதை பற்றி நீங்கள் குழப்பிக் கொள்ள வேண்டாம். யாருக்கும் தலைவர் பதவி நிரந்தரமில்லை. நான் ஒரு தொண்டனாக தான் உங்களுடன் செயல்பட்டு வருகிறேன். யாருக்கும் யாரும் அடிபணிந்தவர்கள் கிடையாது. நீங்கள் என்னுடைய சக தோழர்கள். பாட்டாளி மக்கள் கட்சி எல்லா மதத்திற்கும், சமுதாயத்திற்கும் சார்ந்த கட்சி. கட்சிக்குள்ளும், கட்சிக்கு வெளியும் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நடைபெற்று முடிந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் சமூகநீதி பிரச்சனை உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து பேசினோம்.
ஆனால் தமிழக அரசுக்கு காது கேட்கவில்லை, கண்ணு தெரியவில்லை என கூறிய அன்புமணி தூங்குகிறார்களை எழுப்பி விடலாம், தூங்குவது போன்று நடிப்பவர்கள் எழுப்ப கூடியது என்றார். முதலமைச்சர் அந்த நிலையில் தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் கனிக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றால் இரண்டு மாதத்தில் நடத்தி விடலாம். ஆனால் அவருக்கு இதில் விருப்பமில்லை. ஆந்திரா, தெலுங்கானா, பீகார், கர்நாடகா உள்ளிட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது கனிக்கெடுப்பு. பாட்டாளி மக்கள் கட்சி ஆளும் கட்சியாக வரும் வரை உழைப்போம் உழைப்போம் உழைப்போம் என்று கூறி தனது உரையை முடித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ