)
Tamil Nadu Government: தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் என மொத்தம் 21 கல்லூரிகள் செயல்படுகின்றன. அரசு கல்லூரிகளில் 900 இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என மொத்தம் 2,040 இடங்களும் உள்ளன.
அந்த வகையில், 2025-26 கல்வியாண்டுக்கு பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூன் 20ஆம் தேதி முதல் ஜூலை 21ஆம் தேதி வரை இணைய வழியில் பெறப்பட்டன. 559 மாணவர், 2,986 மாணவியர் என மொத்தம் 3,545 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பின்னர், ஜூலை 31ஆம் தேதி அன்று தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவ்விடங்களுக்கு மாணாக்கர் தாங்கள் விரும்பும் கல்லூரிகளைத் தேர்வு செய்ய இணைய வழியில் கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை வழிவகை செய்யப்பட்டது.
அந்த வகையில், இந்த கல்வியாண்டுக்கான பி.எட்., மாணாக்கர் சேர்க்கை ஆணையை இணைய வழியில் நாளை முதல் (ஆக. 13) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 13ஆம் தேதி (நாளை) காலை 10 மணியில் இருந்து மாணாக்கர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் உள்நுழைவு மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மாணாக்கர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் சேர்ந்து கொள்ள வேண்டும்.
2025–26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். (B.Ed) மாணாக்கர் சேர்க்கை ஆணையை இணைய வழியில் 13.08.2025 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் தகவல்.#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/nLZuMA4XQe
— TN DIPR (@TNDIPRNEWS) August 12, 2025
மேலும், மாணாக்கர் சேர்க்கைக்கு தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் உடன் எடுத்துச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆக. 20ஆம் தேதி முதல் அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட்., முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் பி.எட். (B.Ed.) மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. இதனால் மாணாக்கர்களுக்கும், பெற்றோருக்கும் சிரமங்கள் ஏற்பட்டன. வெளியூர்களில் இருந்து மாணாக்கர் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது. இந்த சிரமத்தை போக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ