)
தமிழ்நாட்டில் உள்ள கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், பால் உற்பத்தியை பெருக்கவும், தமிழ்நாடு அரசு ஒரு சிறப்பான கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக, குறைந்த வட்டியில் ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் TABCEDCO மற்றும் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக கால்நடை வளர்ப்பை ஊக்குவித்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துதல், பால் உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு நிதி உதவி அளித்தல் ஆகியவை உள்ளது.
ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்குவதற்காக, ஒரு மாட்டிற்கு ரூ.60,000 வீதம், அதிகபட்சமாக ரூ.1,20,000 வரை ஆண்டுக்கு வெறும் 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும். இதனை 3 ஆண்டுகள் காலத்தில் திரும்பி செலுத்த வேண்டும். மொத்த தொகையில் 5% மட்டும் பயனாளி செலுத்தினால் போதுமானது. இந்த திட்டத்தில் தகுதி பெற பிற்படுத்தப்பட்டோர் / மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் வயது வரம்பு 18 முதல் 60 வரை இருக்க வேண்டும். முக்கியமாக மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். குறிப்பு: ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இந்த கடன் வழங்கப்படும்.
நீங்கள் உறுப்பினராக உள்ள உள்ளூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அல்லது அருகிலுள்ள ஆவின் அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தை பெறலாம். சாதி, வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ்கள், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல், கூட்டுறவு சங்க உறுப்பினர் சான்று ஆகியவை தேவை. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, ஆவின் அலுவலகம் அல்லது கூட்டுறவு சங்கத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குகடன் உடனடியாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, அருகிலுள்ள கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகத்தையோ அல்லது TABCEDCO-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான tabcedco.tn.gov.in-ஐ தொடர்பு கொள்ளலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ