Taminadu Summer Trekking Guide: தமிழ்நாட்டில் மலையேற்றங்கள் வனத்தீ பருவகாலத்திற்கு பின்னர் மீண்டும் துவக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வனத்துறை மூலம் இயற்கையைப் போற்றுவதை ஊக்குவிப்பதற்காக மலையேற்ற திட்டம் (Trek Tamil Nadu) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களால் 24.10.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 40 அழகிய, மலையேற்ற வழித்தடங்கள் தொடங்கி வைக்கப்பட்டது. இத்துடன் இணையவழி முன்பதிவிற்கான வலைதளமும் www.troktamilnadu.comம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் தமிழ்நாட்டின் வனம் மற்றும் வன உயிரினப் பகுதிகளில் நிலையான முறையில் மலையேற்றம் மேற்கொள்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் " வனப் பகுதிகளை ஒட்டியுள்ளமக்களின் பங்களிப்பை அதிகரிக்கவும் அவர்கள் நிலையான வருமானம் ஈட்டவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் இம்முன்னெடுப்பின் மூலமாக மலையேற்ற வழிகாட்டி பயிற்சிகள் வழங்கப்பட்டு வழிகாட்டிகளாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற 200 நபர்கள் மலையேற்ற வழிகாட்டிகளாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மலையேற்றம் மேற்கொள்பவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அனைத்து பாதைகளும் சூழல் நிலைக்கேற்ப கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டு. பங்கேற்பாளர்களுக்கும் காப்பீடு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து முதல் கட்டமாக (நவம்பர் 01. 2024 முதல் பிப்ரவரி 14, 2025 வரை). இத்திட்டத்தின் மூலம் ரூ. 03.43 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டு, அதில் ரூ. 56.71 லட்சம் உள்ளூர் சமூக மலையேற்ற வழிகாட்டிகளுக்கான ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 4.792 பங்கேற்பாளர்கள் வெற்றிகரமாக மலையேற்றத்தினை முடித்துள்ளனர். இது இந்தியாவில் பொறுப்பான இயற்கை சார்ந்த சுற்றுலாவிற்கு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது. வனத்தீ பருவகாலத்திற்கு பின்னர் மலையேற்றங்கள் மீண்டும் தொடங்கப்படுகிறது.
தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினப்பகுதிகள் (மலையேற்றத்தை ஒழுங்குபடுத்துதல்) விதிகள். 2018 இன் படி. வனப்பகுதிகளில் ஏற்படும் தீ மீதான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் மலையேற்ற நடவடிக்கைகள் ஆண்டுதோறும் பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 15 வரைநிறுத்தி வைக்கப்படுகின்றன. முதல் வனத் தீ பருவகாலம் முடிவுறும் நிலையில், ஏப்ரல் 16 மலையேற்றத்திற்காக 40 மலையேற்ற வழித்தடங்களில் 23 வழித்தடங்கள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இத்தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகள், எளிதானது முதல் மிதமான சிரமம் கொண்டவைகளாக முதன்மைபடுத்தப்பட்டு. அனைத்து வயதினருக்கும் ஏற்றவாறு பாதுகாப்பான, இனிமையான மற்றும் கல்வி சார்ந்த அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட 23 மலையேற்றப்பாதைகள்:
நீலகிரி - லாங்வுட் ஷோலா, கரிக்கையூர் முதல் போரிவரை பாறை ஓவியம், கரிக்கையூர் முதல் ரங்கசாமி சிகரம், பார்சன்ஸ் பள்ளத்தாக்கு முதல் முக்குர்த்திகுடில், அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) முதல் கோலாரிபெட்டா, அவலாஞ்சி (காலிஃபிளவர் ஷோலா) முதல் தேவார்பெட்டா, ஜீன்பூல், ராக்வுட் பாதை
கோயம்புத்தூர் - மாணம் போலி
திருப்பூர் - சின்னார் சோதனைச்சாவடி முதல் கோட்டாறு.
கன்னியாகுமரி - காளிகேசம் முதல் பாலமோர், காளிகேசம் முதல் மராமலை, இஞ்ஜிக்கடவு
திருநெல்வேலி - காரையார் முதல் மூலக்கசம்
தென்காசி - தீர்த்தப்பாறை
தேனி - குரங்கனி முதல் சாம்பலாறு
திண்டுக்கல் - கொடைக்கானல் முதல் வெள்ளகவி
கிருஷ்ணகிரி - குத்திராயன் சிகரம், பிலிகுண்டுலு முதல் ராசிமணல்
சேலம் - நகலூர் முதல் சன்னியாசிமலை சிகரம்
திருப்பத்தூர் - ஏலகிரி சுவாமி மலை, ஜலகம்பாறை
திருவள்ளூர் - குடியம் குகைகள் பாரம்பரிய பாதை
தற்போது திறக்கப்பட்டுள்ள 23 மலையேற்ற வழித்தடங்கள் மட்டுமன்றி மீதமுள்ள வழித்தடங்ளிலும் வனத்தீ தொடர்பான கள நிலவரங்களை முழுமையாக ஆராய்ந்த பின்னர் அந்த வழித்தடமும் விரைவில் திறக்கப்படும். தமிழ்நாடு மலையேற்ற திட்டத்தின் (TREK TAMIL NADU) மறுதுவக்கம், மலையேற்ற அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் குறைந்த நுழைவுக்கட்டணம், பிரத்யேக உள்ளூர் உணவு, முகவர்கள் முன்பதிவு, மின்னணு - சான்றிதழ்கள் (e-certificates) போன்ற புதிய முன்னெடுப்புகளுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மலையேற்ற பாதைகளில் தொடங்கப்படுகிறது. மேலும், நெகிழிப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், கார்பன் தடத்தை குறைப்பதன் மூலமும் நிலையான மலையேற்றத்தை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மறுதுவக்கம், பாதுகாப்பான மற்றும் பொறுப்பான மலையேற்றத்திற்கு வழிவகுக்கும் சிறந்த முயற்சியாகும்.
மேலும் படிக்க | அதிமுக - பாஜக கூட்டணி: ஆட்சியில் பங்கு கிடையாது... இபிஎஸ் உறுதி!
மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை புதியவர்களுக்கு வரப்போகும் தேதி இதுதான்..!!
மேலும் படிக்க | மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்... தாக்கியது யார்...? முழு பின்னணி இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ