Tenkasi Vote Re-Counting: கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் எஸ். பழனி நாடார் போட்டியிட்டார். மறுபுறம், அதிமுக வேட்பாளர் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் அவரை எதிர்த்து போட்டியிட்டார். அதிமுக வேட்பாளறை விட 370 வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடார் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனுவில் குறிப்பிட்டது என்ன?


இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் பழனி நாடாரின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கை தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், "தென்காசியில் பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது. குறிப்பாக தபால் வாக்குகளையும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30 சுற்று வரையிலான வாக்குகளை மறு எண்ணிக்கை நடத்த வேண்டும்" என கோரியிருந்தார். 


மேலும் படிக்க | 'ரெண்டு கையோட என் குழந்தையை கொண்டு வந்தேன்.. ஆனா இப்ப..' கதறி அழும் தாய்!


தீர்ப்பின் விவரம்


இந்த தேர்தல் வழக்கை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி ஜி. ஜெயசந்திரன் அளித்த அந்த தீர்ப்பில், "தபால் வாக்குகள் பதிவு செய்தது, எண்ணிக்கையில் குளறுபடிகள் நடந்துள்ளது ஆவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும்" என குறிப்பிட்டார்.


மேலும், இதற்கு என தனி அதிகாரி ஒருவரை நியமித்து, 10 நாட்களில் தபால் வாக்குகளை மீண்டும் எண்ணி, முடிவை அறிவிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் வழக்குச் செலவாக 10 ஆயிரம் ரூபாயை வழக்கு தொடர்ந்த செல்வமோகன் தாஸ் பாண்டியனுக்கு வழங்க வேண்டும் என தேர்தல் அதிகாரிக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


159 இடங்களை கைப்பற்றிய திமுக கூட்டணி 


2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை அமைத்தது. மொத்தமுள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில், திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியது. அதில், திமுக 133 தொகுதிகள், காங்கிரஸ் 18, விசிக 4, சிபிஐ, சிபிஎம் ஆகியவோ தலா 2 தொகுதிகளில் வென்றன. அதிமுக தலைமையிலான கூட்டணி 75 தொகுதிகளை வென்றது. அதில் அதிமுக 66 இடங்களையும், பாமக 5 இடங்களையும், பாஜக 4 இடங்களையும் கைப்பற்றின. 


குறிப்பாக, இந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 45.38 சதவீத வாக்குகளையும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 39.72 சதவீத வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 6.68 சதவீத வாக்குகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | குழந்தையின் உயிரை காப்பாற்றவே கை அகற்றப்பட்டது-ராஜீவ் காந்தி மருத்துவமனை விளக்கம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ