விஜய்யின் தவெகவுக்கும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் இடையே தொடர்ந்து சமூக வலைதளங்களில் சண்டைகள் அவ்வப்போது எழுந்து வரும் நிலையில் தற்போது இந்த இரு கட்சிகளும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகிறது. என்ன தான் விஷயம்? திடீரென்று இப்படி ஒரு பேச்சு கிளம்ப என்ன காரணம் ??
நடிகராக இருந்த விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்னும் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியதும் அவருக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியது. ஆனால் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தார் சீமான். யார் யாரோ கட்சி தொடங்கும் போது தம்பி விஜய் கட்சி தொடங்கியதில் என்ன தவறு என்று அவர் பேசி இருந்தார்.
அதன் பிறகு விஜய் கட்சி தொடங்கியதும் சீமான் உடன் கூட்டணி இருக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது . விஜய் கட்சி தொடங்கியதும் நடத்தப்பட்ட முதல் மாநாட்டு மேடையில் தமிழும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்பது போல பேசினார் விஜய். இது சீமானுக்கு பிடிக்கவில்லை என்றும் விஜயின் கொள்கை தன்னுடைய கொள்கையுடனும் கோட்பாடுடனும் முரண்பாடாக இருப்பதாகவும் கூறி சீமான் விஜய்க்கு எதிர்ப்பை பதிவு செய்ய தொடங்கினார். ஆதரவு குரலாக இருந்த சீமான், விஜயை படுபயங்கரமாக விமர்சிக்க தொடங்கினார். இதனால் விஜய் ரசிகர்கள் சீமானை விமர்சிக்க தொடங்கினர். அதேபோல சீமானின் ஆதரவாளர்கள் விஜயை கடுமையாக வசை பாடினர்.
இந்த சண்டை நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் அதிகரித்து தான் காணப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில் திடீரென தற்போது சீமானும் விஜயும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைத்தால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் ஆட்சி அமைக்க முடியும் என்று ஒரு சிலர் நம்பி வருகின்றனர். அதற்கான பேச்சுவார்த்தையும் நடந்ததாக பேசப்படுகிறது. திமுகவும் பாஜகவும் தான் தனது எதிரி என விஜய் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார். அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருந்து தற்போது விலகி விட்டது. இதனால் அதிமுகவும் விஜயும் கூட்டணி அமைக்க வாய்ப்புகள் இருந்தன.

சமீப நாட்களாக எடப்பாடி பழனிசாமி ஆறு மாதத்திற்கு பிறகு தான் யாருடன் கூட்டணி என்பது குறித்து தெரியவரும் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து பலரும் பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்துக் கொள்ளும் என்று பேசினர். அதற்கேற்றது போல முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் அண்ணாமலை மற்றும் பல முக்கிய பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால் அதிமுக பாஜக கூட்டணியை வலுப்படுத்த பேச்சுவார்த்தை நடப்பதாக பேசப்பட்டது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடியாத சூழல் விஜய்க்கு தற்போது உள்ளது. அதன் பிறகு சீமானுடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. அதன்படி சீமானுடன் கூட்டணி அமைக்க ஒரு சிலரை விஜய் தூது அனுப்பியதாகவும் ஆனால் சீமான் தற்போது எந்த முடிவையும் எடுக்கும் நிலையில் இல்லை என்றும் ஏற்கனவே விஜய்யுடன் அவருக்கு ஒரு சில மனக்கசப்புகள் இருப்பதாகவும், கட்சியை தொடங்கியதும் விஜய் தனக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க தவறியதாகவும் சீமான் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் - சீமான் கூட்டணி அமைவதில் சந்தேகம் எழுந்துள்ளது. புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் அவருக்கு பல சிக்கல்கள் வரும் என்பது அவருக்கே தெரியும் . பூத் கமிட்டியில் தொடங்கி தேர்தல் பணிகள் வரை களத்தில் இறங்கி வேலை செய்ய அவருக்கு பெரிய அளவில் ஆட்கள் இன்னும் இல்லை.
ரசிகர்களை நம்பி கட்சி தொடங்கியுள்ள விஜய் அதனை வாக்காக மாற்ற வேண்டுமென்றால் மிக பலமான அஸ்திவாரம் அமைக்க வேண்டும். அதற்கு கூட்டணி என்பது அவருக்கு மிகவும் தேவையான ஒன்றாக உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமையாவிட்டால் அவருக்கு இருக்கும் ஒரு மிகப்பெரிய சாய்ஸ் சீமான் மட்டுமே. ஆனால் சீமான் கூட்டணி இல்லாமல் தொடர்ந்து தனித்தே தேர்தலில் போட்டியிட்டு வருவதால் அவர் கூட்டணி அமைக்க ஒத்துக் கொள்வாரா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | சுனிதா வில்லியம்ஸ் பற்றி மயில்சாமி அண்ணாதுரை சொன்ன முக்கிய தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









