Scholarship : தமிழ்நாட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. கல்வி உதவித்தொகை பெற உடனே விண்ணப்பிக்க வேண்டும். அரசு இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும். எனவே இந்த வாய்ப்பை தவற விட்டுவிடாதீர்கள். முழுவிவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை
செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ மாணவியர்கள் கல்வி உதவித்தொகை 1-5ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.2000-ம், 6-8ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000-ம், 9-12ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.8000-ம், பட்டப்படிப்பு பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.12,000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ. 14000-ம் வருடாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், வாசிப்பாளர் உதவித்தொகை 9-12ம் வகுப்பு பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.3000-ம், இளங்கலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.5000-ம், தொழிற்கல்வி மற்றும் முதுகலைப் பட்டம் பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவர்களுக்கு ரூ.6000-ம் வாசிப்பாளருக்கு வழங்கப்படும்.
இவ்வுதவித்தொகை பெற அரசு இ-சேவை மையங்களில் மாற்றுத்திறன் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள (UDID CARD) மருத்துவச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, புகைப்படம் -1, கல்வி பயிலும் பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வரிடமிருந்து பெறப்படும் 2025-2026-ம் நிதியாண்டிற்கான கல்விச்சான்று (BONAFIDE CERTIFICATE) போன்றவற்றை அரசு இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
பிஎம் யஷஸ்வி கல்வி உதவித்தொகை
அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட(பி.வ), மிகப்பிற்படுத்தப்பட்ட(மி.பி.வ) சீர்மரபினர் (சீ.ம) பிரிவைச் சார்ந்த மாணவ/மாணவியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை (PM YASASVI Postmatric Scholarship) திட்டம் கீழ்க்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நலத்துறை மூலம் வருடந்தோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.வ/மி.பி.வ/சீ.ம மூன்றாண்டு மாணவ/மாணவியருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
II. இளங்கலை (தொழிற்படிப்பு), முதுகலை, பாலிடெக்னிக், போன்ற பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
2) விண்ணப்பிக்கும் முறை:
2025-26ஆம் கல்வியாண்டில் மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு, மாணவ/மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப்பட்டுள்ள UMIS (University Management Information System) எண் மூலம் https://umis.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது.
மாணக்கர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை (Institution Nodal Officer) அணுகி. https://umis.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
3) மேற்படி திட்டத்தின் கீழ் பயன்பெற மாணாக்கர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 31.12.2025 என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
4) கல்வி உதவித்தொகை தொடர்பான சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்
மேலும் படிக்க | ரேஷன் கார்டு உள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் கடன், மானியம் உண்டு - கல்வி தேவையில்லை
மேலும் படிக்க | ரேஷன் கார்டு பயனர்களுக்கு டபுள் ஜாக்பாட்.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
மேலும் படிக்க: குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









