பாரத் பந்த்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!

Tamil Nadu Government: பாரத் பந்த் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 8, 2025, 05:02 PM IST
  • பாரத் பந்த் நாளை நடைபெறுகிறது.
  • பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்பு.
  • தொழிற்சங்கங்கள், விவசாயிகள் போராட்டத்திற்கு அழைப்பு
பாரத் பந்த்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு அதிரடி!

Tamil Nadu Government: நாடு முழுவதும் புதன்கிழமையான நாளை (ஜூலை 9) முழு வேலைநிறுத்த போராட்டத்திற்கு பல்வேறு தொழிலாளர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Add Zee News as a Preferred Source

Bharat Bandh: எதற்கு இந்த வேலைநிறுத்தப் போராட்டம்?

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவு, விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிரான கொள்கைகள் உள்ளிட்டவற்றை ஆதரிப்பதாக மத்திய அரசை எதிர்த்து இந்த நாடு தழுவிய முழு வேலைநிறுத்த போராட்டத்திற்கு (Bharat Bandh) அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் தொழில் நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொது போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களும் பங்கேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tamil Nadu Government Warning: தலைமை செயலாளர் எச்சரிக்கை
 
இந்நிலையில், இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சில அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ஆம் தேதி (புதன்கிழமை) அன்று 'ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில்' பங்கேற்க முன்வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

Tamil Nadu Government: துறை ரீதியாக நடவடிக்கை

மேலும், அதில், "அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் அல்லது ஆர்ப்பாட்டம் அல்லது வேறு எந்த வகையான போராட்டத்திலும் பங்கேற்பது, அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டைப் பாதிக்கும். அந்த வகையில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973 இன் விதிகள் 20, 22 மற்றும் 22-A பிரிவுகளை மீறுவதாகும்" என சுட்டிக்காட்டி உள்ளார்.  

இதைத் தொடர்ந்து, அந்த அறிவிப்பில், "எனவே உங்கள் துறையின் அரசு ஊழியர்கள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள், 1973 இன் விதிகளை மீறுவதில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இல்லையெனில் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

Tamil Nadu Government: பணியில் இருந்தும் நீக்கப்படலாம்...

ஜூலை 9ஆம் தேதி அன்றோ அல்லது வேறொரு நாளில் திட்டமிடப்பட்ட 'ஒரு நாள் அகில இந்திய வேலைநிறுத்தத்தில்' பங்கேற்றதன் விளைவாக அல்லது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத சங்கங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பங்கேற்று, அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவில்லை என்றால், அவர்களின் விடுப்பு அங்கீகரிக்கப்படக் கூடாது. 

மேலும், அரசின் அறிவுறுத்தல்களின்படி, 'வேலை இல்லை - ஊதியம் இல்லை' (No Work - No Pay) என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் கிடைக்காது. பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஊதியம் பெறுபவர்கள், பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ஜூலை 9 பாரத் பந்த்: பஸ், ரயில் ஓடுமா? எந்த நிறுவனங்கள் இயங்கும்? எவை இயங்காது? முழு லிஸ்ட் இதோ

மேலும் படிக்க | ஜூலை 15ல் மகளிர் உரிமைத் தொகை தவிர வேறு எந்த திட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம்?

மேலும் படிக்க |  கடலூர் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து: கேட் கீப்பர் மட்டும் காரணம் இல்லை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News