திண்டுக்கல்லில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடையே ஏற்பாட்ட மோதலில், பாஜக மாவட்ட துணைத் தலைவர் மண்டை உடைந்தது.

திண்டுக்கல், தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக பிரச்சார இயக்கம் இன்று (ஜூன் 20) நடைபெற்றது. அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்றிய செயலாளர் சரத்குமார் என்பவர் பாஜக அரசை கண்டித்தும், முருக பக்தர் மாநாடு குறித்தும், இந்து முன்னணியைச் சேர்ந்த ஒருவரின் பெயரை சொல்லி பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அங்கிருந்த இந்து முன்னணியினர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, தகவல் அறிந்து வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து பேச்சுவார்த்தை நடத்தி கலைய செய்தனர்.
இந்த கைகலப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த ஒன்றிய செயலாளர் சரத்குமார் என்பவரும், இந்து முன்னணியை சேர்ந்த வினோத் என்பவரும் காயம் அடைந்து ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது குறித்து இந்து முன்னணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் வினோத் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சரத்குமார் ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இவர்களை பார்க்க வந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர், இதேபோல் கம்யூனிஸ்ட் கட்சியினர் மருத்துவமனை முன்பு இருதரப்பினரும் கோஷங்களை மாறி மாறி எழுப்பி உள்ளனர்.
உடனடியாக அங்கிருந்த போலீசார் பாஜக-வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்திய போது அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது இந்து அமைப்பினருக்கும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே மீண்டும் கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாஜகவை சேர்ந்த திண்டுக்கல் கிழக்கு மாவட்ட துணைத்தலைவர் பாலமுருகன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெள்ளத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனை அடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். அதேபோல் அங்கு நின்று கொண்டிருந்த பாஜக இந்து முன்னணி அமைப்புகளை சேர்ந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லில் தொடங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்து முன்னணி, பாஜக ஆகியோர் இடையேயான பிரச்சனை மாலை வரை தொடர்ந்ததால் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ