கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நகேந்திரனுக்கு கோவை கோட்ட பா.ஜ.க சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட பா.ஜ.கவினர் வரேவற்பு விழா கூட்டத்தில் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், மாநில பொது செயலாளர் முருகானந்தம் உட்பட கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், பொறுப்பு கிடைத்தால் கையில் சாலுடன், பிற தலைவர்களை பார்க்க போவார்கள். நம் தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்களை பார்க்க வந்து இருக்கின்றார் என தெரிவித்தார். பா.ஜ.கவை பொறுத்தவரை யார் கட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிவித்த அவர், இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப போகும் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பார் என தெரிவித்தார்.
மேலும் படிங்க: முதியோர் ஓய்வூதியம் பெற்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதா?
இதை தொடர்ந்து கூட்டத்தினர் மத்தியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல். முருகன், வேகத்துடன் பணியை துவங்கி இருக்கின்றார் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எனவும், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 2026 தேர்தலில் பல மடங்கு உயரும் என தெரிவித்தார். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி எனவும், திமுக இதுவரை சந்திக்காத தோல்வியை அடையும் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சட்டமன்றத்தில் நான் அமைதியாக பேசுவேன், ஆனால் வானதியின் பேச்சு திமுகவினர் அலறும் வகையில் இருக்கும், அவர் பேசினால் அமைச்சர்கள் அலார்ட் ஆகிவிடுவார்கள் என தெரிவித்தார். ஒவ்வொருவருக்கும் ஒரு ரசிகர் கூட்டம் இருக்கு, ஆனா ஒட்டுமொத்த ரசிகர் கூட்டமும் அண்ணாமலைக்கு இருக்கின்றது என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை இனிப்பான மண், நெல்லை மண் வேறு விதமாக இருக்கும் எனவும், இங்கு எல்லா சமூகத்தினரும் மரியாதையாக பேசக்கூடிய பகுதி என தெரிவித்த அவர், என்னுடைய பையன்களில் ஒருவனை கோவையிலேயே இருக்க வைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது என தெரிவித்தார். கூட்டணியை பற்றி யாரும் கவலை பட வேண்டாம், சீட்டை பற்றியும் கவலை பட வேண்டாம் என தெரிவித்த நயினார் நாகேந்திரன், கூட்டணிகளை பற்றி அகில இந்திய தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார். மாநில தலைவராக என்னுடைய பொறுப்பு தொண்டர்களை பாதுகாப்பதுதான் என் வேலை எனவும்,சீட் பற்றி முடிவு செய்வது அமித்ஷாவின் வேலை எனவும் தெரிவித்தார். நம்முடைய போன் எல்லாம் ஆளும் கட்சியினர் டேப் செய்கின்றனர், எச்சரிக்கையாக பேசுவது நல்லது என தெரிவித்த அவர், அமித்ஷா ஒரே நாளில் எல்லா வேலையினையும் முடித்து விட்டார் எனவும் தெரிவித்தார்.
நான் அடிக்கடி தமிழகம் வருகின்றேன், நீ பேசாமல் இருந்தால் போதும் என சொல்லி இருக்கின்றார் அமித்ஷா என தெரிவித்த நயினார் நாகேந்திரன், நாம் நம்முடைய பூத்தில் வேலைகளை பர்த்தால் போதும், இரட்டை இலையோடு அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களுடன் சட்டமன்றம் செல்வோம் எனவும் தெரிவித்தார். 2026ல் out of control திமுக தான் ஆகப்போகின்றது என தெரிவித்த அவர், அமித்ஷா போன மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று இருக்கின்றது. இப்போது தமிழகத்திற்கு வந்து சென்று இருக்கின்றார் எனவும் தெரிவித்தார். நாம் அதிமுகவினருடன் இணைந்து ஒன்றாக பயணிக்க வேண்டும் எனவும், நமது கூட்டணி கட்சி ஆளும் கட்சியாக வர வேண்டும் எனவும் இனியொரு முறை திமுக ஆட்சிக்கு வந்தால் நம்மை பாதுகாக்க முடியாது எனவும் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
மேலும் படிங்க: அமைச்சர் பொன்முடி மீது நாடு முழுவதும் புகார் - பாஜக சார்பில் திட்டம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









