திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை இன்று சாமி தரிசனம் செய்தார், கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் ஆலயத்தில் தரிசனம் மேற்கொண்டவர் தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தார், கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உச்ச நீதிமன்றத்திற்கும், ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் என தனித்தனி அதிகாரம் உள்ளதாகவும், இந்திய ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் தற்பொழுது கேட்டுள்ள 14 கேள்விகள் நியாயமானது என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்க | வெளியானது 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்! ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
அவர் கேட்ட கேள்விகளில் எவ்வித தவறும் இல்லை என்று கூறியவர், இந்தியாவில் இதுவரை இருந்த ஜனாதிபதிகள் 15 முறை ஆர்டிகல் 143 ஐ பயன்படுத்தி கேள்வி கேட்டுள்ளனர். இது 16 வது முறை ஜனாதிபதி கேட்டுள்ள கேள்வி என்று கூறினார், 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு 25 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் ஜனாதிபதி 143 ஆர்டிகளை பயன்படுத்தி போராடி தமிழ்நாட்டிற்கு 25 டிஎம்சி தண்ணீர் பெறப்பட்டது. அதனை ஏற்றுக்கொள்ளும் அரசு தற்பொழுது ஆர்டிகல் 143ஐ பயன்படுத்தி ஜனாதிபதி 14 கேள்விகளை கேட்டிருப்பது குறித்து தமிழக முதல்வர் மக்களை திசை திருப்பும் வகையில் நடந்து கொள்வது ஏற்கத்தக்கது அல்ல அப்பொழுது இனிக்கிறது தற்பொழுது கசக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இபிஎஸ் ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் எல்லோரும் எங்களுடன் தான் உள்ளார்கள். யாரும் எங்களை விட்டு பிரிந்து செல்லவில்லை என்று கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளது. ஓபிஎஸ் எப்பொழுதும் எங்களோடு தான் உள்ளார் என்றும் பிரதமர் மோடி இதயத்தில் தனி இடத்தில் வசித்து வருகிறார் என்றும் கூறினார். தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தரும் பொழுது அவர் பேசுவார் என்றும் கூறியவர் தேசிய அளவில் அண்ணாமலைக்கு பதவி கிடைக்குமா? என கேள்வியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், தற்பொழுது தான் நிம்மதியாக உள்ளதாகவும் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு விவசாயம் செய்து வருகிறேன்.
ஒருபுறம் கட்சிப் பணிகளை அவ்வப்போது செய்து வாழ்க்கையில் நிம்மதியாக இருப்பதாகவும் கூறினார், தொடர்ந்து பேசியவர் தேவையில்லாத எந்த வேலையிலும் சிக்காமல் பெரிய சந்தோஷமாக தற்பொழுது உள்ளதாகவும், குழந்தையாகவும் தந்தையாகவும் மகனாகவும் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இதுவே சிறப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார். தேவையில்லாத வேறு எந்த வேளையிலும் மாட்டிக் கொள்ளவில்லை என்றும், இதிலேயே பயணிக்க விரும்புகிறேன் என்று கூறினார். தற்பொழுது தான் கூண்டுக்கிளியாக நிம்மதியாக இருக்கிறேன் என்றும் நமக்கான காலம் வரும் பொழுது பறப்போம் என்றும் கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ