நயினார் நாகேந்திரன் தன் தரத்தை தாழ்த்திக் கொண்டுள்ளார். திமுக என்னும் ஊழல் சக்தியை அகற்றவும் எல்லாத் துறைகளிலும் ஊழல் வரலாறு மிக்க அளவிற்கு நடைபெற்று இருக்கிறது. குடும்ப ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனை அகற்ற தமிழக வெற்றிக் கழகம் கட்சியை விஜய் தொடங்கினார். ஆட்சி அமைக்க தேவையான அளவுக்கான வாக்கு சதவீதத்தை நாங்கள் பெறுவோம். திருச்செங்கோட்டில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடந்த மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பேசிய கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி அளித்துள்ளார்.
மேலும் படிக்க | ரேஷன் கார்டு முக்கிய அப்டேட்! கைரேகை பதிவு செய்யாதவர்கள் பெயர் நீக்கம் - எச்சரிக்கை

தமிழக வெற்றிக் கழகம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மருத்துவ முகாம் பெரிய பாவடி செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமில் எலும்பு மூட்டு இதயம், மகப்பேறு அறுவை சிகிச்சை, குழந்தைகள் பிரிவு, தோல் மருத்துவம் ஆகிய பிரிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 2500 மதிப்புள்ள எலும்பு வலிமை ஸ்கேன் ,1200 மதிப்புள்ள இசிஜி எக்கோ ,ரூ 1,000 மதிப்புள்ள யு சி ஜி அப்டமன், பிஎம்ஐ மெஷின் ,சர்க்கரையூரிக் ஆசிட் பிளட் பிரஷர் பரிசோதனை ஆகியவை விலையில்லாமல் மேற்கொள்ளப் பட்டது முகாமில் மருத்துவர்கள் விழிப்புணர்வு உரை என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ்
முகாமை தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் துவக்கி வைத்தார். 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குழந்தையுடன் வருபவர்களுக்கும் ஆட்டோ வசதி செய்து தரப்பட்டிருந்தது. முகாம் மதியம் 2 மணி வரை நடக்க உள்ளது. துவக்க விழா நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ராஜ் கூறியதாவது, கட்சி தொடங்குவதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்பே விஜயின் ரசிகர்கள் இதுபோல் பல மருத்துவ முகாம்களை நடத்தி மக்கள் சேவையாற்றி இருக்கிறோம். தொடர்ந்து இதுபோல் செய்து கொண்டே இருப்போம். நாயினார் நாகேந்திரன் கீழ்த்தரமாக விஜய் குறித்து விமர்சித்துள்ளார். மக்கள் இதனை பார்த்துக் கொண்டுள்ளனர். அவர் தரத்தை அவரே குறைத்துக் கொண்டுள்ளார். சேலம் சம்பவம் வரை விஜய் அரைசதம் அடித்துள்ளார். விரைவில் அவர் கூட்டங்களில் நடக்கும் சம்பவங்கள் மூலம் செஞ்சுரி அடிப்பார் என அமைச்சர் நாசர் விமர்சித்துள்ளார் என கேட்டபோது சேலத்தில் நடந்தது ஒரு விபத்து. அதை வைத்து மோசமான அரசியல் செய்யும் அமைச்சர் நாசரின் செயலை கண்டிக்கிறோம்.

திமுக என்னும் தீய சக்தி
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது திமுக என்னும் தீய சக்திக்கு எதிராக தான். அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்திருப்பதை பார்த்து தான் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஊழல் நிறைந்த கட்சியாக திமுக ஆட்சியில் இருப்பதால் தான் தமிழக வெற்றி கழகத்தை துவக்கினோம். ஜனநாயக மாண்பு எதிராக குடும்ப அரசியல் செய்து கொண்டுள்ளனர். இதனை தடுக்கத்தான் நாங்கள் கட்சி ஆரம்பித்துள்ளோம். கூட்டணிக்கு பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்து எங்களுடைய நிலைப்பாடு ஒன்று தான். எங்களுடன் எங்கள் தலைமையை ஏற்று வருபவர்களுக்கு எப்பொழுதும் இடம் அளிக்க தயாராக இருக்கிறோம். யாரும் வரவில்லை என்றாலும் தனித்துப் போட்டியிடும் தகுதியுடன் தான் தமிழக வெற்றி கழகம் உள்ளது.
கூட்டணி குறித்த முடிவு
கூட்டணி குறித்த முடிவை எங்கள் தலைவர் அறிவிப்பார். விரைவில் அறிவிப்பு வெளி வரும். நயினார் நாகேந்திரனுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. மக்களே ஒதுக்கி விட்டார்கள். 30 சதவீத வாக்குகள் என்பதை தவெக நிரூபிக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கருத்து சொல்லப் படுகிறது என கேட்டபோது 30 சதவீதம் அல்ல ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்குடன் தமிழக வெற்றி கழகம் திகழ்கிறது என கூறினார். நிகழ்ச்சியின் போது நகரச் செயலாளர்கள் இப்ராஹிம், நாகராஜ், ஒன்றிய செயலாளர் விக்னேஸ்வரன் ,பொருளாளர் கார்த்தி ஆகியோர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | பத்திரப் பதிவுத்துறையில் 11 முக்கிய மாற்றங்கள்! தமிழ்நாடு அரசின் முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









