திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கே சொந்தம்; தர்காவை இடமாற்றனும் - ஹெச். ராஜா சொல்வது என்ன?

Thiruparankundram Hill Controversy: இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் திருப்பரங்குன்றத்தில் உள்ள தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம் என்றும் அந்த மலை இந்துகளுக்கே சொந்தம் என்பும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 3, 2025, 10:50 AM IST
  • லண்டன் தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் - ஹெச். ராஜா
  • உத்தர பிரதேசத்தைப் போல் இங்கும் இந்து எழுச்சி வரும் - ஹெச். ராஜா
  • திருப்பரங்குன்றம் ஸ்ரீகந்தர் மலைதான் - ஹெச். ராஜா
திருப்பரங்குன்றம் மலை இந்துகளுக்கே சொந்தம்; தர்காவை இடமாற்றனும் - ஹெச். ராஜா சொல்வது என்ன?

Thiruparankundram Hill Controversy: டெல்லியில் இருந்து காரைக்குடி செல்வதற்காக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா (H Raja) விமான மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். 

Add Zee News as a Preferred Source

அப்போது பேசிய ஹெச். ராஜா,"தலைநகர் டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக அருகே பெருபான்மையோடு ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக ஆம் ஆத்மி கட்சியினுடைய ஊழல், நகர் முழுவதும் அசுத்தமாக பராமரிக்கப்படாத மோசமான ஆட்சியை மக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால் இம்முறை பாஜக அரசாங்கத்தின் சாதனை அங்கு நல்ல பலன் அளிக்கும் சூழல் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை: 'சிக்கந்தருக்கு அங்கு என்ன வேலை?'

தமிழகத்தில் இந்து விரோத அராஜகம் நாளுக்கு நாள் அக்கிரமங்கள், அராஜகங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்து கோவிலை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிற ஒரு ஆட்சி இது. பழனியில் முருகனுக்கு மாநாடு நடத்தி சனாதன ஹிந்து தர்மத்தை மலேரியா கொசு மாதிரி அடிக்க வேண்டும் என்று சொன்ன தீய நபருக்கு மகுடம் சூட்டுவதற்காக நடந்தது என்று தெளிவாகத் தெரிகிறது.

மேலும் படிக்க | இந்து முன்னணி போராட்டம் எதிரொலி - மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

லண்டன் தீர்ப்புப்படி முழு மலையும் முருகனுக்கு சொந்தம் என்று சொல்லி இருக்கிறார்கள். மத நல்லிணக்கம் என்கிற புண்ணாக்கு, புடலங்காய் எல்லாம் எப்போது வருகிறது. சிக்கந்தர் என்பவர் எப்படி மலையில் இறந்தார், எதற்கு மலைக்கு வந்தார், தர்கா வருவதற்கு முன்பாக அங்கு இருந்தது யார்?... காசி விஸ்வநாதர் கோவில் தானே இருந்தது. சிக்கந்தருக்கு என்ன வேலை அங்கு. காசி விஸ்வநாதர் கோயிலை இடிப்பதற்காகத்தான் சிக்கந்தர் போனார் என்கிற கருத்து மக்களிடையே உள்ளது.

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை: 'தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம்'

இந்துக்களுக்குத்தான் அந்த மலை சொந்தமே தவிர உனக்கு என்ன வேலை. மத நல்லிணக்கம் விரும்புவர்கள் இந்து - முஸ்லிம் இடையே இணக்கமாக வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தர்காவை வேறு இடத்திற்கு மாற்றலாம். அயோத்தியும் இதை போல் தான் ஆராய்ச்சி அடிப்படையில் கொடுக்கப்பட்டது, அதைப்போல் வேண்டுமென்றால் இந்துக்களுடன் இணக்கமாக வேண்டும் என்பவர்கள் செய்யலாம்.

இங்கு இருக்கக்கூடிய செயின்ட் தாமஸ் சர்ச் தான் கபாலி கோவில். இதையெல்லாம் திருமாவளவன் பெருமையாக சொல்கிறார். இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை நீங்கள் ஆண்டாண்டு காலமாக அபகரிப்பீர்கள், ஆதரிப்பீர்கள். சிங்கம் ஆட்டுக்குட்டியை சாப்பிட்டால் சிங்கத்துடன் ஆடு ஐக்கியம் ஆகிவிட்டதாக சொல்வதைப் போல, அழித்துவிட்டால் ஒன்றாகி விடுவோம் என்று சொல்வது சரியாக இருக்காது.

மேலும் படிக்க | பத்திரப்பதிவு துறையில் சாதனை படைத்த தமிழ்நாடு அரசு... ஒரே நாளில் இவ்வளவு வருமானமா?

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை: 'இந்து எழுச்சி இங்கும் வரும்'

தமிழக அரசு இந்து விரோதக் கொள்கையை கைவிட வேண்டும். இல்லையென்றால் 2026 இந்துக்கள் அனைவரும் தேசியவாதிகள், தமிழை நேசிப்பவர்கள், நீங்கள் தமிழ் விரோதிகள். ஈவேராவின் (பெரியார்) பெயரை சொல்பவர்கள் தமிழை விரும்புவர்களாக இருக்க முடியாது. தமிழை சனியன் காட்டுமிராண்டி கூட்டம் என்று சொன்ன ஈவராவின் கூட்டம் தமிழ் பற்றாளர்களாக இருக்க முடியாது.

நாளைக்கு இந்துத்துவாவின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தர வேண்டும். இந்துக்களை துன்புறுத்துவது தான் இந்த அரசின் வேலை. உதயநிதி ஸ்டாலின் நான் கிறிஸ்தவன், அதில் பெருமைப்படுகிறேன் என்று சொல்கிறார், சேகர் பாபு அல்லேலூயா என்றார். அதற்குத்தான் அவருக்கு அல்லேலூயா பாபு என பெயர் வைத்தேன். அயோத்தி பிரச்சனைக்கு பிறகு இந்து எழுச்சியால் யாரும் உத்தர பிரதேசத்தில் அதிகாரத்திற்கு வர முடியவில்லை, அந்த எழுச்சி இங்கும் வரும்" என்றார்.

திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை: 'அது ஸ்ரீகந்தர் மலைதான்'

மேலும், இன்றும் (பிப். 3), நாளையும் (பிப். 4) மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த ஹெச்.ராஜா,"நவாஸ்கணி வந்தபோது இந்த 144 இல்லை. இந்துக்களை துன்பப்படுத்தி வேறு மதத்திற்கு தள்ளிவிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் அரசின் எண்ணம். திருப்பரங்குன்றத்திற்கு வாருங்கள் என்று சொன்னால் கைது செய்வீர்களா, அராஜகம் இல்லையா, நீதித்துறை தீர்ப்பில் சொல்லி இருக்கிறது.

மேலும் படிக்க | கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இவர்களெல்லாம் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்..!

அந்த இடம் ஸ்ரீகந்தர் மலைதான். சிக்கந்தர் அங்கிருந்த கோவிலை இடிக்க போனதாகவும் அதனால் அங்கிருந்த முருக பக்தர்கள் அவரை தாக்கியதாகவும் கருத்து உள்ளது. இந்துக்கள் மலை மீது செல்வதற்கு நியாயம் உள்ளது. இஸ்லாமியர்களுக்கு அங்கு என்ன வேலை. சிக்கந்தர் எதற்காக சென்றார், ஆக்கிரமிக்க சென்றவர். பூர்வீகமாக சொத்துக்களை வைத்துக் கொள்வதற்கு வேறு எந்த கடவுளுக்கும் அதிகாரம் இல்லை, இந்து கடவுளுக்கு மட்டும் தான் உள்ளது" என்றார்.

பட்ஜெட் 2025: கனிமொழி விமர்சனம் - ஹெச்.ராஜா பதிலடி

நாடாளுமன்றத்தில் முதல்முறையாக நான் பீகார் பட்ஜெட் உரையை கேட்டேன் என மத்திய பட்ஜெட் குறித்து திமுக எம்.பி., கனிமொழி விமர்சித்திருந்தார். இந்த விமர்சனத்திற்கு ஹெச்.ராஜா பதிலடி கொடுத்தார். இதுகுறித்த அவர்,"பைத்தியக்காரத்தனம், கனிமொழிக்கு அரசியல் சட்டம் தெரியுமா...? பட்ஜெட் என்றால் என்னவென்று தெரியுமா....? ஏதாவது மாநிலத்திற்கு சிறப்பு திட்டம் இருந்தால் அதன் பெயர் வரலாம், பெயர் வரவில்லை என்பதற்காக ஒரு மாநிலத்திற்கு என்று பட்ஜெட்டை வைத்து பேச முடியுமா.

பட்ஜெட் 2025: கடைசி பந்தில் சிக்ஸர் அடித்த நிர்மலா சீதாராமன்

மதுரையை சேர்ந்த வீர தமிழச்சி நிர்மலா சீதாராமன் கடைசி பந்தில் சிக்சர் அடித்துள்ளார். அரசு ஊழியர்கள் உட்பட ரூ.7 லட்சத்தில் இருந்த வரி வரம்பை ரூ.12 லட்சம் வரை உயர்த்தி உள்ளார். உங்களுக்கும் ஓட்டு போட்ட மக்களுக்கும் இதை சேரும் தானே. குரங்கை சாக கொடுத்த ஆண்டி என்று சொல்வதைப்போல இண்டி கூட்டணி (INDIA Bloc) எம்பிக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். பட்ஜெட்டில் அறிவித்துள்ள பயன்களை பெறுபவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் தானே, அப்படி இருப்பவர்கள் தமிழர்கள் இல்லை என்று சர்டிபிகேட் கொடுத்து விடுவீர்களா.

பட்ஜெட் 2025: 'தேச விரோத கும்பல் இப்படி தான் பேசும்'

ஈவேரா சொல்லிக்கொடுத்த பிரிவினைவாத சித்தாந்தம் என்பது ஆங்கிலேய அடிமைத்தனம். 1944இல் ஈவேரா போட்ட தீர்மானம் அதுதான். வெள்ளையன் இந்தியாவை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அப்படி வெளியேறினாலும் லண்டனில் இருந்து இந்தியாவை ஆள வேண்டும் என தீர்மானம் பொட்ட தேசத்துரோகிக்கு சிலை வைக்கும் கூட்டம் நாட்டு மக்களுக்கு நல்லது நினைக்குமா? நாட்டை, சுதந்திரத்தை எதிர்த்த தேச துரோகிகள். தேச விரோத கும்பல் மத்திய பட்ஜெட்டை பற்றி இப்படித்தான் அறிவில்லாமல் பேசுவார்கள்" என சாடினார்.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி மக்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளார் நிர்மலா சீதாராமன் - மனோ தங்கராஜ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Sudharsan G

I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.

...Read More

Trending News