)
பொது சேவையின் மூலம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதை டாக்டர் எஸ்.ஜி. சூர்யா வழக்கமாக கொண்டுள்ளார். இந்த ஆண்டு தனது வருடாந்திர பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, பாஜக இளைஞரணி தலைவரும், நமோ வாசவி அறக்கட்டளையின் நிறுவன இயக்குநருமான டாக்டர் எஸ்.ஜி. சூர்யா, தனது நமோ வாசவி அறக்கட்டளை சார்பில் சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் ஒரு மகத்தான மக்கள் சேவை நிகழ்வை நடத்தினார். இந்நிகழ்வில், சுயசார்பு வாழ்வை ஊக்குவிக்கும் நோக்கில், 30 ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் 60 தையல் இயந்திரங்கள் தென் சென்னை, வேளச்சேரி பகுதியில் தேவைப்படும் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
ஆட்டோ ரிக்ஷாக்கள் குடும்பங்களுக்கு நிலையான வருமான ஆதாரத்தை வழங்கவும், தையல் இயந்திரங்கள் பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தையும் அதிகாரமளித்தலையும் மேம்படுத்தவும் உதவின. இந்த நிகழ்வில் டாக்டர் எஸ்.ஜி. சூர்யா பேசுகையில், பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் "சுயசார்பு பாரதம்" என்ற கனவால் தான் உத்வேகமடைந்ததாக மற்றும் இந்தியா சுயசார்பு அடைவதற்கு, நாமும், நம் குடும்பங்களும் சுயசார்பு அடைவது மிக அவசியம் என்று குறிப்பிட்டார். மோடி அய்யாவின் பல்வேறு திட்டங்கள் பெண்கள் மற்றும் தாய்மார்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களது சுமையைக் குறைத்து, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இங்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டது குறித்துப் பேசிய அவர், திமுக தனது தேர்தல் அறிக்கையில் ஆட்டோ வாங்க மானியம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அது நடக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். சிறு வயதிலிருந்தே தனக்கு சமூக சேவையில் ஆர்வம் இருப்பதாகவும், நமோ வாசவி அறக்கட்டளை மூலம் மக்களின் வாழ்க்கை மேம்பட ஒரு சிறு காரணமாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.
நமோ வாசவி அறக்கட்டளை
எஸ்.ஜி. சூர்யா 2009ல் தொடங்கப்பட்ட நமோ வாசவி அறக்கட்டளை கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழகம் முழுவதும் விரிவான சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அறக்கட்டளை "கற்க கசடற" என்ற திட்டத்தின் கீழ் 950-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி அளித்துள்ளது. மேலும், 7 இடங்களில் "நமோ குருகுகுலம்" என்ற சமூக மையங்களை நிறுவி 2700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறது. "நமோ மீல்" திட்டத்தின் கீழ், மாதந்தோறும் 2000-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சத்தான உணவை வழங்கி வருகிறது. கோவிட்-19 காலகட்டத்தில், 50,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியுள்ளது. விளையாட்டுத் துறையில் 7000-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு உதவியுள்ளது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது 50,000-க்கும் மேற்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ