திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா?.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்து உள்ளார். 

Written by - R Balaji | Last Updated : Jun 10, 2025, 09:48 PM IST
  • திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து உள்ளது ‘
  • நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா?.. நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வருகிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணியாணை வழங்காமை. போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களே கழிவறையைக் கழுவும் நிலை. பெயர்ந்து விழும் பள்ளிக்கூரைகள் எனப் பள்ளிக்கல்வித்துறை சீரழிந்து வரும் வேளையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Add Zee News as a Preferred Source

இது போதாதென்று. 7,000-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாதது. துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி. பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை, வினாத்தாள் கசிவு, பல்கலையில் மதப்பிரச்சாரம் என உயர்க்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தைக் கிளப்புகிறது. 

ஒரு காலத்தில் ஆன்றோர்களால் "கல்வியில் ஆன்றோர்களால் "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" எனப் போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடித்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழித்து, 'கல்வியிற் சீரழிந்த தமிழ்நாடாக" திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது. 

ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாது. 'அப்பா, பல்கலை வேந்தர் என தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் ஆசையில், கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து, புதுப்புது விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், "ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18 மாதாங்களில் நிரப்பப்படும்" என்று சட்டப்பேரவையில் முதல்வர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை.

நூற்றுக்கு நூறு சதவிகிதம் எல்லா நன்மையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும், பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

மேலும் படிங்க: பெண்களே... 8% வட்டியில் ரூ.1.50 லட்சம் வரை கடன் - தமிழ்நாடு அரசின் சூப்பர் திட்டம்!

மேலும் படிங்க: நாங்களும் அதிக தொகுதிகளை கேட்போம்... திமுகவுக்கு திடீர் குண்டைபோடும் திருமா!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News