விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்! வேறு யாரும் கொடுக்கவில்லை!

விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை பற்றி வேல்முருகன் கொச்சையாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Jun 5, 2025, 02:08 PM IST
  • விஜய் கல்வி விருது வழங்கும் விழா.
  • வேல்முருகன் கொச்சை பேச்சு.
  • இணையத்தில் எதிர்க்கும் கண்டனம்.
விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன்! வேறு யாரும் கொடுக்கவில்லை!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்குவதற்கு முன்பு இருந்தே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை நேரில் அழைத்து பரிசுகளை வழங்கி வருகிறார். கட்சி ஆரம்பித்த பின்பும் இதனை தொடர்ந்து செய்து வருகிறார். சமீபத்தில் இந்தாண்டு பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை சென்னைக்கு அழைத்து வந்து பாராட்டு விழா நடத்தினார் விஜய். 3 கட்டங்களாக நடைபெறும் இந்த விழா சென்னை மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு வந்திருக்கும் மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு மதிய விருந்துடன் கூடிய ஊக்கத்தொகையும் விஜய் வழங்கினார். மாணவ, மாணவிகள் உற்சாகமாக இந்த விழாவில் பங்கெடுத்து சென்றனர்.

Add Zee News as a Preferred Source

மேலும் படிக்க | நாளை (ஜூன் 5) கடைசி நாள்.. கிருஷ்ணகிரி மாவட்ட ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

வேல்முருகன் பேச்சு 

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரான வேல்முருகன் விஜய்யின் இந்த செயலை மிகவும் கொச்சைப்படுத்தி பேசி இருந்தார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாக்களில் மாணவிகளை விஜய் அரவணைத்து புகைப்படம் எடுக்கிறார். விஜய் தன் மகள் வயதுள்ள பெண்களிடம் அநாகரீகமாக மேடையில் நடந்து கொள்கிறார் என்பது போல வேல்முருகன் மேடையில் பேசியிருந்தார். இந்த வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் வேல்முருகனுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து இதற்கு எந்த ஒரு ரியாக்ஷனும் இல்லை, அவர்கள் இதனை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இந்நிலையில் பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வேல்முருகனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

விஜய்க்கு தமிழிசை சௌந்தர்ராஜன் ஆதரவு

"சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் வேல்முருகன் அவர்களே உங்கள் கொச்சையான பேச்சை கண்டிக்கிறேன்..... தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தம்பி விஜய் அவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அளவிற்கு ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார் சில நேரங்களில் அதில் அவர் பேசிய அரசியல் கருத்துக்களில் கூட எனக்கு மாறுபாடு உண்டு. ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரை அதிகம் சந்தித்து அவர்களின் அறிவுத்தாகத்தை அறிந்தவள் என்ற வகையில் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதை நான் வரவேற்கிறேன் தமிழ் அழகானது உங்கள் மனது தான் அழுக்கானது. 

குழந்தைகள் அவரை அண்ணா என்று அழைப்பது தமிழில் அன்பின் வெளிப்பாடு மட்டுமே இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அழைப்பு ஆனால் அந்த உறவை கொச்சைப்படுத்துவது அந்த குழந்தைகளின் மனதை புண்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆதரவளிக்கும் பெற்றோர்களின் மனதையும் புண்படுத்துவது ஆகும் தாங்கள் இவ்வாறு புண்படுத்துவது தமிழ் பண்பாடும் இல்லை மனித நேயமும் அல்ல .திருவேல் முருகன் அவர்களின் கொச்சைப் பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Trending News